20.9.05

எழுவாய் பயனிலை செயப்படுபொருள்

(அண்ணன்மார் கூத்து மெட்டு) (எடுப்பு) எத்தனைப் பாட்டை எழுதிப் போட்டாலும் எதற்கும் இங்கே பயனிலை! எழுவாய் நெஞ்சே செயப்படுபொருள்தான் ஏதும் இங்கே தெளிவிலை... (எத்தனைப்...... (துணை எடுப்பு) வள்ளுவருக்கே நாமம் போட்டவர் - நெஞ்சை அள்ளும் சிலம்பை விற்று வாழ்பவர் பாரதி பாவேந்தர் பெயர்களைச் சொல்லித் தம்மை வளர்ப்பவர் நம்மை முறைக்கையில் (எத்தனைப்...... (முடிப்பு) தமிழைக் காசாக்கிச் சொத்து சேர்த்தவர் கம்பனைக் கரகம் ஆடிப் பிழைப்பவர் - கவி அரங்கத்து வாய்ப்பை நாடி இளிப்பவர் தரகு வேலையைத் தமிழில் திணிப்பவர் தன்னை விளம்பரம் ஆக்கித் திரிபவர் - தமிழ் மொழியை வாணிகம் பண்ணிச் செழிப்பவர் இத்தனைப் பேரும் இத்தரை வாழ்கையில் (எத்தனைப்...... (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976)

2 comments:

இராம.கி said...

அருமையான பாட்டு; உண்மையான கருத்து. தமிழாசிரியர்கள் தங்களுடைய உணர்வுகளை விட்டு வெறுமே தமிழை வைத்துக் காசு பண்ணத் தொடங்கியது 70 களின் தொடக்கத்தில் இருக்குமா? இவர்கள் மட்டும் இப்படி விலை போகாது இருந்தால், இன்று தமிங்கிலம் வந்து சேர்ந்திருக்குமா? இது பற்றி இன்னும் எழுத வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

ENNAR said...

காசேதான் கடவுலப்பா அந்த கடவுலுக்கு இது தெரியுமப்பா

என்னார்