7.10.16

பயன் உள்ளதுதான் எதுவும்.

முகநூல்/முகப்புத்தகம்/Facebook -இல் நீடிப்பதோ, உட்புகுவதோ வீண் என்னும் நண்பர் கவனத்துக்கு இச்சேதியைக் கொண்டு வந்துள்ளேன். இரா. நாறும்பூநாதன் என்னும் முகநூல் நண்பர், (முகப்புத்தகம் என்று முகநூலை முதலிலிருந்தே சொல்லிவருபவர்) - தான் முகநூலில் பதிவனவற்றைப் புத்தகங்களாக்கி வருபவர். விற்பனையும் குறைவில்லாமல் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். சான்றாக, இந்த நூல். இதன் அட்டைப்படமும் ஓர் அழிவிலாக் கோயிற்படம்தான். கழுகுமலைக் கோயில். ஓவியர் ஈசுவரமூர்த்தியால் வரையப்பெற்றது. டெம்மி அரைக்கால் அளவுள்ள பக்கங்கள் 286 கொண்டது. இந்தப் புத்தகத்தை அவர் கி.ரா. ஐயாவுக்கு அனுப்ப, அவர் தம் வழமைப்படி,குங்குமச் சிவப்பு நிறமெழுதும் தூவலால் குறித்து வாசித்தபின், முனைவர் சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகருக்குக் கொடுக்க, அவர் தன் வழமைப்படி(நாயகர், எந்தப் புத்தகமானாலும் எங்களைப் போல் அடிக்கோடுகளோ குறியீடுகளோ பதிக்காமல், தூய்மையாகப் படித்துத் தருவார்)வாசித்துமுடித்து எனக்குத் தந்தார். தான் வாங்கும் எண்ணற்ற நூல்களில், தன் பெயரையும் எழுதி உடைமையாக்கிக்கொள்ள மாட்டார் அருள் (எ) நாயகர். மாறுபட்ட மனமுடையவர்களின் உலகத்தில் வேறுபட்டுத் தன்னியல்பாக வாழ்பவர்களோடு பழகுமாறு விதிக்கப்பெற்றுள்ளவன் அடியேன்.இவ்வாறு, மூன்றாவது கையாக, இந்த நூல் என்னை வந்தடைந்தது. எனக்குக் கிடைக்கும் நூல்கள் பல, இத்திறத்தனதாம். இது எனக்கும் ஆகவும் உடன்பாடே. நண்பர்களுடன் பகிர்ந்து வாசிப்பதே மனநிறைவுதான். தன்னந்தனியாக, ஒருமுறையும் புரட்டிவாசிக்கப்பெறாத புத்தம் புதிய புத்தகங்கள், அடங்காக்குமைச்சலுடன் நிலைப்பேழைக்குள் ஒடுங்கிக் கிடக்கும் நூலகமெல்லாம் நூலகமா? - தேவமைந்தன்

14.5.16

வியத்தலும் இலமே

"தங்களுக்கு இயல்பாகவும், பயிற்சி + முயற்சிகள் மூலமும் வாய்த்துள்ள தகுதியால் 'பெரியவர்கள் ஆனவர்களை' வியந்து பொறாமைப்படவோ, போற்றவோ நாங்கள் செய்வதில்லையே. அவ்வாறு, இயற்கையாகவே நல் வாய்ப்பைப் பெறாதவர்களாகப் பிறந்து வாழ நேர்வதால் ~~இயல்பை மீறி தங்களுக்கு அமைத்துக் கொண்ட வாய்ப்புக்களால் 'வென்றவர்கள்' வல்லாண்மை செய்யும் இந்தச் சமூகத்தால், 'சிறியவர்கள்' என்று முத்திரை குத்தப்படுபவர்களை இகழ்வது என்பதைச் செய்ய நினைக்கக் கூட மாட்டோம் :)"

- சங்ககாலப் பாவலர் கணியன் பூங்குன்றனார்

18.4.16

ஈழத்துப் பாடல்கள் - நன்றி: BBC Tamil


tag:www.bbctamil.com,2016-02-21:/tamil/sri_lanka/2016/02/160221_elathupadal5
/tamil/sri_lanka/2016/02/160221_elathupadal5
2016-02-21T15:56:59+00:00
2016-02-21T15:31:51+00:00


ஈழத்துப்பாடல்கள் பகுதி 5
இலங்கையின் பாடல்கள், இசைவடிவங்கள் குறித்து ஆராயும் எமது ஈழத்துப்பாடல்கள் என்னும் இந்த தொடரின் ஐந்தாவது பகுதியில் தாலாட்டு மற்றும் ஒப்பாரி பாடல்கள் குறித்து ஆராய்கிறோம்.



ஈழத்துப்பாடல்கள் பகுதி 5





tag:www.bbctamil.com,2016-02-13:/tamil/sri_lanka/2016/02/160213_eelaththu4
/tamil/sri_lanka/2016/02/160213_eelaththu4
2016-02-14T16:55:52+00:00
2016-02-13T14:26:14+00:00


ஈழத்துப்பாடல்கள் - பகுதி 4
இலங்கையின் இசை வடிவங்கள் குறித்து ஆராயும் ஈழத்துப்பாடல்கள் என்னும் இந்த தொடரின் இந்த நான்காவது பகுதியில் இலங்கையின் நாட்டார் பாடல்கள் குறித்த சில கருத்துக்களை கேட்கலாம்.



ஈழத்துப்பாடல்கள் பகுதி 4





tag:www.bbctamil.com,2016-02-07:/tamil/sri_lanka/2016/02/160207_eelaththupadal3
/tamil/sri_lanka/2016/02/160207_eelaththupadal3
2016-02-07T16:23:52+00:00
2016-02-07T15:31:43+00:00


ஈழத்துப்பாடல்கள் பகுதி - 3
ஈழத்துப்பாடல்கள் என்னும் தலைப்பிலான எமது இலங்கையின் பாடல்கள் குறித்த இந்தத்தொடரின் இந்த மூன்றாம் பகுதியில் அங்கு புழக்கத்தில் இருக்கும் நாட்டுக்கூத்துப் பாடல்கள் குறித்து பார்க்கலாம்.



ஈழத்துப்பாடல்கள் பகுதி 3





tag:www.bbctamil.com,2016-01-31:/tamil/arts_and_culture/2016/01/160131_eelaththupadal2
/tamil/arts_and_culture/2016/01/160131_eelaththupadal2
2016-01-31T15:41:44+00:00
2016-01-31T15:39:24+00:00


ஈழத்துப்பாடல்கள் பகுதி இரண்டு
இலங்கையின் பாடல்கள் குறித்த இந்த தொடரின் இந்த பகுதியில் அங்குள்ள சடங்குப்பாடல்கள் குறித்து பேசப்படுகின்றது.



ஈழத்துப்பாடல்கள் பகுதி இரண்டு





tag:www.bbctamil.com,2016-01-24:/tamil/sri_lanka/2016/01/160124_eelaththupadal1
/tamil/sri_lanka/2016/01/160124_eelaththupadal1
2016-01-24T13:28:12+00:00
2016-01-24T12:46:06+00:00


ஈழத்துப் பாடல்கள் - பகுதி ஒன்று
இலங்கை தமிழர்களின் பாடல்கள் மற்றும் இசை வடிவங்கள் குறித்த தொடரின் முதல் பகுதி.



ஈழத்துப் பாடல்கள் - பகுதி ஒன்று





ஆன்றி த்ரோயா பிரெஞ்சில் எழுதிய ‘கைகள்’ [சிறுகதை] ~ தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

ஆன்றி த்ரோயா பிரெஞ்சில் எழுதிய ‘கைகள்’ [சிறுகதை] ~ தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர். (இக்கதை இடம் பெற்ற தொகுப்பு நூல்: “கடவுள் கற்ற பாடம்’ நற்றிணை பதிப்பகம், சென்னை - 5. ஆகஸ்ட் 2015)
உலகின் அழகான சாலைகள் சந்திக்கும் ஷான்லிசே சதுக்கம் அமைந்திருந்த- கிங் ஜார்ஜ் சிகை அலங்கார நிலையத்தில், இருபத்து மூன்று வயதில், கைகளைப் பராமரித்து அழகு சேர்க்கும் பணியில் ழினேத் சேர்ந்தது, இப்பணி மீது அவளுக்கிருந்த நாட்டத்தினால் அல்ல. ஆண்கள் மட்டுமே வாடிக்கையாளர்களாக வரும் இந்த இடத்தில்,அவளுக்கான கணவரைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கைதான் முக்கிய காரணம். பத்தொன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை இவளிடம் கைகளைக் காட்டிய எந்த ஆண்மகனும், இவளது கைகளைக் கேட்டபாடில்லை` ~ என்று நண்பர் நாயகர் நடையில் சுவாரசியமாகத் தொடங்கும், ஆன்றி த்ரோயா’வின் ‘கைகள்’ கதையின் போக்கு அட்டகாசமானது. பிரான்சில் சொந்தக்காலில் நிற்கும் ஓர் இளம்பெண் முதிர்கன்னியாகும் வரை, அவளைக் கல்யாணம் செய்து கொள்ளக் கைகளை நீட்டும் ஆண்தகைமை[பெளருஷம்], அவளிடம் பதினேழாண்டுகளாக ‘விரல்பராமரிப்பு’க்காகக் கையை நீட்டும் எவனுக்கும் வாய்க்கவில்லை என்பதை நுண்ணுணர்வை இரசிக்கும் வாசகர் எவரானாலும் - ஆணானாலும், பெண்ணானாலும், உணர்ந்து வருந்தவே செய்வர். பிரெஞ்சிளைஞர் பார்வையில்தான் ஏதோ குறை என்று நாம் நினைக்கும்போது, ஆன்றி த்ரோயா சொல்கிறார்: “... இவளது உடற்கட்டில் ஆண்களின் உணர்வைப் பற்றவைத்துக் குடும்பம் நடத்தத் தூண்டும் ஏதோ ஒன்று குறைகிறது என்பது மட்டும் உண்மை.” (கடவுள் கற்ற பாடம், பக்கம் 25)
உயரமானவள். வெள்ளை. ஆட்டுக்குட்டியை நினைவூட்டும், அவள் கண்களின் இடைவெளி. மென்மையான பார்வை. அசைவுகளில் சஞ்சலம் கொண்டவள். மற்ற பெண்களுக்கு வெட்கம் வராத சூழலுக்குக்கூட நாணமடையும் இயல்பு உடையவள். வேலை இடைவேளையில், உடன்பணியாற்றும் இளந்தோழிகளின் அரட்டையில் கலந்துகொள்ள மாட்டாள். ஒப்பனை: வானத்துக்கு மேகம்போலக் கொஞ்சம் ‘மேக்கப் பவுடர்’ ஒப்பனை; செவிமடல்களின் பின்பக்கம் இரண்டு சொட்டு ‘பெர்ஃபியூம்.’ அவ்வளவுதான்.
நாற்பது வயது வரை தனது கன்னிமையைத் துன்பமெனக் கருதியவள், இப்பொழுது அதைத் ‘தனிமை’ என்று அடையாளப்படுத்த விழைகிறாள். நகங்களைச் சீர்படுத்துவதில் ழினேத்தை விஞ்ச எவருமில்லை. ‘கிங் ஜார்ஜ் சிகை அலங்கார நிலைய’த்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், அவள் ‘அப்பாய்ன்ட்மென்ட்’ கிடைப்பதற்கு ஒருநாள் தள்ளிப் போனாலும் கவலைப்பட மாட்டார்கள்.
தன்னுடன் வேலைசெய்பவர்கள் பலர் இந்தத் தொழிலை ‘போரடிக்கும் எந்திரமயமானது’ என்று நினைத்திருந்தனர். ழினேத்துக்கோ, அதில் ஒருவிதமான கவித்துவமும் சுவாரசியமும் அடங்கியிருக்கின்றன என்பது கருத்து. கீழ்த்தளத்தில் வாய்மூடித் தன் பணியே கவனமாக இவள் இருக்கையில் மேல்தளத்தில், இவளும் அணியும், கம்பெனியின் முதலெழுத்துகள் பொறித்த வெள்ளைநிறச் சீருடை அணிந்த ‘முடிவெட்டுபவள்’ வாடிக்கையாளருடன் அடிக்கும் அரட்டையும் அதன் விளைவாக விளையும் வெடிச்சிரிப்புகளும், தெளிவாகப் புரிகிறதோ இல்லையோ, இவள் கன்னங்களில் சிவப்பை அப்பும். ழினேத்துடன் பணிபுரியும் பெண்கள் தம் உடம்பை ஓரளவேனும் வெளிக்காட்ட முயலும் நிலையில், இவள் ‘கவரிங் புரூச்சுகளை’ப் போட்டு அந்த இடங்களை மறைத்துக் கொள்வாள். கொஞ்சம் தாரளமாக இந்த விஷயத்தில் அவள் இருந்திருந்தால், இந்நேரம் அவளுக்குக் கணவன் அமைந்திருக்கலாம், “இயல்பை வலிந்து சென்று மாற்றுவதால் எவ்விதப் பலனும் இல்லை ~~ என்று எண்ணி, அத்தகைய எண்ணம் வரும்போதெல்லாம் அமைதி அடைந்து கொள்வாள் ழினேத்.
ஆண்கள் அருகிலிருந்து பணிசெய்வதில் கிடைக்கும் ‘இத்தகைய பிரச்சினை எதுவுமற்ற பரவசம்’ மூலம் ழினேத் எதையும் குறிப்பாக எதிர்நோக்குவதில்லை. ஆனாலும் நாள்தோறும் இயல்பாக அவளுக்கு அமையும் இச்சூழல், போதைப்பொருளைப் போல அவசியமாகிவிட்டது. [இந்தச் சூழல் விவரம் கதையில்] வேலை முடிந்து இரவில், குவியோன்சேன்சீரிலுள்ள தன் அறைக்குத் திரும்பும்போது, மிகவும் சோர்வாக இருப்பாள். ஆண்களின் பலவிதமான கைகள் ~ மென்மையாகவும் ஈரமாகவும், வறண்டும் எலும்பாகவும், மேற்புறம் முடியடர்ந்திருப்பவை என்று ~ அவள் மனத்திரையில் வந்துபோகும். மணிக்கட்டிலிருந்து பிரிந்து காற்றில் மிதக்கும் கைகளில் சில, கனவுகளிலும் பின்தொடரும். ஆனாலும் அடுத்தநாள் காலை கண்விழித்து எழும்போது, எப்பொழுதும்போலவே, தெளிவான மனத்துடன் இருப்பாள்.
ஒரு மே மாத சனிக்கிழமை. ஒரு நக அலங்கார வேலையை முடித்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளர் வரும்வரை கிடைக்கும் தற்காலிக இடைவெளியின்பொழுது, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் ழினேத். அப்பொழுது, கடைக்கு உள்ளே ஒரு குள்ளமான நபர் வந்தார். சாம்பல்நிற முடியும் வெளிறிய வட்டமான முகமும் கொண்டவராக இருந்தார். அவரது வயிற்றுப் பகுதியில் மேடாக இருந்தது. அவர் அணிந்திருந்த கறுப்புநிறக் கோட், விறைப்பான காலர், அவரது சிவப்பு ‘டை’யில் காணப்பட்ட முத்து எல்லாம் சேர்ந்து...... உறுதியாக இவர் ஒரு பெரிய ஆபீசராகத்தான் இருக்க வேண்டும் என்ற கணிப்புக்கு வந்தாள் ழினேத். ‘கிங் ஜார்ஜ் சிகை அலங்காரக் கடை’க்கு அவர் வருவது இதுதான் முதல் முறை என்பது மட்டும் அவளுக்கு நிச்சயமாகத் தெரியும்.
[விதி நல்லபடி ஆகும். அதைத்தானே திருவள்ளுவர் ‘ஆகூழ்’ என்று கூறுகிறார். தன் 23 வயது முதல் 40 வயது வரை, மற்ற தன்னொத்த வேலை செய்யும் பெண்கள் போலல்லாமல் கன்னிமையை பேச்சிலும் கூடக் காத்துவந்த ழினேத்தின் வாழ்க்கையை அடியோடு மாற்றப் போகிறவர் அந்த நபர் என்பது ழினேத்துக்கு அந்த தருணத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா? நமக்கும் கதையை முழுதாகப் படிக்கும்வரை தெரிய வேண்டாம்;-) ]

10.3.16

kalapathy கலாபதி: ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரை இல்லாத ராஜகுமாரன்' - க...

kalapathy கலாபதி: ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரை இல்லாத ராஜகுமாரன்' - க...: Rajaji III காதல் சம்பந்தமான கதைகளும்; பெண்களின் உணர்வுகள் தொடர்பான கதைகளும் மட்டுமே பெண்களை மிகவும் கவருகின்றன என்பதை, இந்த மதிப்புரை...

ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரை இல்லாத ராஜகுமாரன்' - கலாபதி தேவமைந்தன் மதிப்புரை: நிறைவுப் பகுதி

Rajaji III
காதல் சம்பந்தமான கதைகளும்; பெண்களின் உணர்வுகள் தொடர்பான கதைகளும் மட்டுமே பெண்களை மிகவும் கவருகின்றன என்பதை, இந்த மதிப்புரையை நான் எழுத ஒத்துழைத்த நண்பியர் எண்பித்தனர். இது எனக்கு வியப்பை மட்டுமின்று, தமிழ்த் திரைப்படக் கதைப்போக்குக் குறித்த விழிப்பையும் ஏற்படுத்தியது. ‘பாசமலர்’ படக் காலக்கட்டத்தில், அரங்கை விட்டு வெளிவரும் பெண்களின் முந்தானை நனைந்து பிழியப்பட்டிருப்பதையும்; மழைவிட்ட தூவானம் போல் அவர்களின் விழிகள் வெளிறியிருப்பதையும், கோவை இராயல் தியேட்டருக்கு முன்பு எங்கள் பள்ளி இருந்ததால் கண்டிருக்கிறேன். இப்பொழுது நயன்தாரா த்ரிஷா போன்றவர்கள் அந்தப் போக்கை மாற்றிவிட்டனர். இபொழுதெல்லாம் ஆண்கள் ‘சப்ஜெக்ட்’ படங்கள் அதிகமாதலால் ~ சூது வாது பொய் கபடம் மதம் மாச்சரியம் முதலான அறுவகைக்குணங்கள் தமிழ்த் திரையுலகை ஆள்கின்றன. இப்பொழுது நாம் ராஜாஜி ராஜகோபாலனின் மறுபக்கக் கதைகளுக்கு வருவோம்.
ஆயுள்வேத “டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார்” என்று ‘பத்தியம்’ கதை விழிக்கிறது. “மயில்வாகனம் காதிலிருந்த குறைச் சுருட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டார்” என்று தூங்கப் போகிறது. இடையில் பத்தியம் பத்தியமாகவே ஜெயிக்கிறது. ஆயுள்வேதத்தையே சத்துவ-பத்திய வாழ்க்கையாகக் கொண்டொழுகும் அவர், தன் தொழில் தர்மமே குறியென்று வாழ்கிறார். ‘Non compromising medication’ என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் ‘திட்டவட்டமான பண்டுவமுறை’யையே தன் இயல்பாகக் கொள்கிறார். செல்வாக்கு மிக்கவர்தான். ஆனால், செல்வம் சேர்க்காதவர். ஏழ்மையே தாழ்வில்லை; எந்தக் காரணத்தை முன்னிட்டும் விலைபோய் விடக்கூடாது என்பதில் ‘வஜ்ரம்’ அவர். ஈழத்தமிழ் கொஞ்சி விளயாடும் இந்தக் கதையைப் படித்துப் பார்ப்பவர்கள் ‘பாக்கியவான்கள்.’ பானைக்கொரு சோறு:
“சேர்டிபிக்கட்டை நம்பி வந்தால் போதுமோ? வைத்தியத்தை நம்பியெலோ வரவேணும்.”
“காசு எவ்வளவெண்டாலும்...”
“அது எனக்குத் தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டுவாருங்கோ”
இப்படிப் பேசுபவர் “வீட்டில் இருந்ததெல்லாம் உழுத்துப்போன உரல் உலக்கைகளும் மருந்துச் சீசாவுகளும்தான்.”(49)
‘விழிப்புகள்’ -- இந்தக் கதை நனவோடை முறையிலும் கனவுகாண் நிலைமையிலும் [stream of consciousness + dreaming brainy state] சொல்லப்பட்டிருப்பதைச் சொல்லிக்காட்ட வேண்டியது முக்கியம். சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ ~ நின்ற மரத்தின் கதை. இது விழுந்த மரத்துக்கும் மனிதனுக்கும் நிகழும் ‘நிகழ்மை’ [synchronicity என்பது உளத்தியல் தத்துவத்தில் வருவது; synchronization என்பது திரைப்பட அறிவியலில் வருவது] அவன் புலன்கள் ஒடுங்கவில்லை. ஆனால் சிந்தனை ஒடுங்குகிறது. மனமோ, மோனப் பெருவெளியில் மிதக்கும் பரவசம் எய்துகிறது. பானுமதி என்னும் செவிலி/ உயிர்த்தோழி/ காதலியின் ‘அந்த’ முறுவல் அவனின் ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்கிறது.
‘கறுத்தக்கொழும்பான்’ - அகோ.. வாரும் பிள்ளாய்... இந்தக் கதைதானே ராஜாஜியையும் தேவமைந்தனையும் நட்பால் பிணைத்தது...சரசுவதி என்ற யதார்த்தமான ‘கேரக்டர்’...உலகெங்கும் சாதி மத மொழி நாடு பேதமற்றுப் பார்க்கக் கூடிய பெண்பாத்திரம்...”வேலிக்கு இந்தப் பக்கத்திலிருந்து ஒப்பாரிவைத்த சரசுவதியின் தொண்டை எந்த அளவுக்குத் திறந்திருக்கிறது என்பதை வைத்துக்கொண்டு எந்த அளவு தூரத்திலுள்ள ஆளுக்கு முறைப்பாடு செய்கிறாள் அல்லது அள்ளி வைக்கிறாள் என்பதை அந்த ஊரில் எவரும் அறிந்து கொள்வர்”(71) என்று அவள் அறிமுகம் தொடங்குகிறது. எங்களூரில் ஒருவர்.. பக்கத்து ஊரில் உள்ளவர்க்குப் போன் போட்டால் அதற்கேற்ப மென்மையாகவும்; தூரத்திலுள்ள ஊருக்கோ நாட்டுக்கோ போன் அடித்தால் அந்த ஊர்/நாடு எந்த அளவு தொலைவிலுள்ளதோ அந்த அளவுக்குத் தன் ‘வால்யூமை’ ஏற்றிக் கொள்வார். அப்படியிருக்கிறது, சரசுவதி, தன் ஊருக்குள்ளேயே முறைப்பாடு வைக்கிற ‘லெச்சணம்.’ சாவித்தல் அல்லது அறம் பாடுதல் அவளுக்குக் கைவந்த கலை. தருமனை தறுமன் என்று பல்லைக் கடித்துக் கொண்டு வைபவள். தலைமையாசிரியரைப் பிடிக்காத நண்பர் ஒருவர் ~ “என்ன ஹெட்மாஸ்டன் அவன்?” என்று கேட்பார் இங்கே. சரசுவதியின் மொழிப் புழங்கல், ரகர றகர ழகர ளகர லகர வேற்றுமைகளைத் தன் வயிற்றெரிச்சலுக்கேற்ப, மாற்றிக்[tune] கொள்ளும். அப்பேர்ப்பட்டவள், எந்தத் தருமனத் ‘தறுமன்’ என்று வைவாளோ, அதே தருமன் ~ வைரவசாமிக்குப் பொங்கலிட விறகு வாங்கி, சுட்டெரிக்கும் வெயிலில் அவள் சுமந்து வரும்போது பார்க்க நேர்ந்து சுமையைத் தன் தோளுக்கு மாற்றிக் கொள்ளும் பொழுதே அவள் வக்கிரம் நாண்டுகொள்ள; பரிவும் பாசமும் அவள் சித்தத்துள் நுழைந்து கோலோச்சத் தொடங்கி விடுகின்றன. மாற்றார் செய்கையால் நம் மனம் ஏற்கும் வேதியல்[ரசவாத] மாற்றமே இந்தக் கதையின் கொடுமுடி. இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழ் வாசகர்களே! ‘கொழும்பான்’ என்பது, என்ன மரமென்று சொல்லுங்கள் பார்ப்போம் ;)
‘தெற்காலை போற ஒழுங்கை’ கதையப் படிக்கும் முதியோர் இல்ல மாமியார்கள் அழுதே விடுவார்கள். தமக்கிப்படியொரு மருமகளைத் தரவில்லையே ஆண்டவரே என்று கடவுளை நொந்து கொள்வார்கள். ஒனக்கெழுதி வச்சது அப்படித்தான் என்று அடுத்த கட்டில் கெழம் சிடுக்கெடுக்கும். அப்படிப்பட்டவள் ~ இக்கதையில் வரும் பொறுப்பான மருமகள். மகன் தங்கள் குடும்பப் பொறுப்பை ஏற்பான் என்று பெற்றோர் நம்ப, ‘தயக்கம் தங்கரெத்தின’மான மகன் தயங்ங்ங்ங்க, புதிதாக வரும் மருமகளோ, “நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று அவன் தங்கைகளைக் கரையேற்றும் பொறுப்பைத் தானே ஏற்பதும்... கற்பனை போலிருந்தாலும் அருமை. நாம் பார்க்காமல் விடுவதால் அத்தி பூக்காமல் காய்க்கிறதா என்ன? ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் ‘ரெகுலர் சமாச்சாரங்களை’ விவரித்தாலும் இந்தக் கதை தெற்காலை போற ஒழுங்கான ஒழுங்கையாக, கோர்வையாக, அழகாக, நுட்பமாக நவிலப்பட்டிருப்பது ராஜாஜியைச் சிறந்த ‘கதைசொல்லி’ ஆக்குகிறது.
‘மெளனத்தின் சப்தங்கள்’ - ‘ழுஃதனெ[ய்]சிய’ என்று அழைக்கப்படும் ~ ‘கருணைக்கொலை’ என்று பிழையாகச் சொல்லப்படும் அறச்செயல் குறித்து மீயுயர் மாந்தநேயத்துடன் ஆராயும் அரிய கதையாடல். இதற்காகவே ராஜாஜியின் கோட்டில் ‘எம்.வி.பி.’ பதக்கத்தை அணிவிக்கிறேன். Sue Miller எழுதிய ‘While I Was Gone’(1999) என்ற அருமையான புதினத்தில், ‘அறவழி உயிர்நீக்கல்’ என்னும் euthanasia -வை ஜோயி என்றழைக்கப்பெறும் டாக்டர் பெக்கர் [Dr. Becker] என்ற கால்நடை மருத்துவர், ஆயிரக்கணக்கை எட்டும் அளவு செல்லவிலங்குகளான நாய்களுக்குச் செய்திருப்பாள்/ர். மனிதக் கொலை செய்தவனான எலெ மஃயூ என்னும் பழைய நண்பன், தன் செல்ல நாய்க்கு அந்தச் செயல் அவளால் செய்யப்படக் கூடாது என்பதிலேயே குறியாய் இருப்பான். அந்தப் புதினத்தைத் தற்கால ஆங்கிலம் அறிந்தவர்கள் வாசியுங்கள். தவற விடாதீர்கள். இங்கே வரும் மனிதர், ‘தானுண்டு தான் வேலையுண்டு’ என்று இருப்பவர். மூலிகை வைத்தியர். சிவனடியான் ~ சரியான பெயர். சிவனே வைத்திருப்பார் போல. தன் மகனாக இருந்தாலும் தீராத நோயினால் வலியால் துடிக்கும் நிலையில், வைரவசாமியை வேண்டிக்கொண்டு ‘அந்த நாள்’ மாலை முழுவதும் தன் மகன் ஐயங்கனுக்காக இறுதி ஒரே ஒரு மருத்துவமாக மூலிகைகளை அரைத்து, ஐயங்கன் ஆசையாக வளர்த்த ஆட்டின் பாலிலேயே அக்கலவையைக் கரைத்து ஊட்டுவார். “நடப்பது என்னவென்று முன்னமே அறிந்துகொண்டவன் போன்று ஐயங்கன் தன் தகப்பனை நன்றியுடன் பார்த்தான். அவன் கண்கள் ஒரேயடியாக இடுக்குகளில் சொருகிக் கொண்டபோதுதான் தன் மகனின் வேதனைகளுக்கு இறுதியில் முடிவு வந்துவிட்டதெனச் சிவனடியான் அறிந்து கொண்டார். அப்போது அவரெழுப்பிய ஓலம்தான் அந்த ஊரையே உலுக்கியெடுத்தது” என்று படித்துவிட்டு என் நண்பி அழுத அழுகைதான் ~ இந்த மதிப்புரையையே நான் அவர்களுடன் சேர்ந்து எழுதக் காரணமாயிற்று, “என்ரை மோனை..!” என்று இந்த மெளனத்தின் சப்தங்களுக்கு அந்தமும் ஆதியுமாக ஆன சிவனடியானின் ஓங்கார அலறல் உலுக்கியெடுத்துவிடும்... இக்கதையை உண்மையாக வாசிப்பவர்களை. முடிவில், “மகன் செத்ததோடை சிவனடியானுக்கு விசர் வந்திட்டுது”(115) என்று, நடந்ததை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் ஓரிருவர், ஊரெழுமுன்னே உறக்கத்திலிருந்து விழித்து கொண்டவர்கள், தமக்குள் சொல்லிக் கொள்வதாகக் கதை முடிகிறது. “தொகுப்பினுள்ளே உருக்கமான மணியான கதை” என்று என் சகவாசகியரிடம் பதக்கம் பெற்ற கதை.
‘ஆசை வெட்கம் அறியும்’ என்ற ‘கடோசி’[கரிசல் சொல்]க் கதை ஆண்மனத்தின் அபத்தமொன்றை மென்மையாக நவிலுகிறது. தன்னிலும் முப்பது வயது குறைந்தவளைச் சின்ன வீடாக ‘செட்-அப்’ செய்து சாதிக்க, சிவப்பிரகாசத்தார் தமக்கு நண்பரான ‘லாயர்’ ஒருவரைப் பயன்படுத்துகிறார். ஆனால், அந்த வழக்குரைஞரோ மனச்சாட்சியும் விவேகமும் உள்ளவர். ‘ஃபீஸ்’ஐப் பெரிதாக எண்ணாதவர். அன்னபூரணி அக்காவைத்தான் உயர்வாகக் கருதுபவர். மனவியலடிப்படையிலும் உலகியலடிப்படையிலும் குழந்தையொன்றுக்கு எடுத்துச்சொல்வதுபோல் பக்குவமாக சிவப்பிரகாசரிடம் எடுத்துச்சொல்லி, உண்மையுரைப்போனாகவும் விளங்கி, அவரைவிட்டுப் பிரிந்துபோன இல்லாளை சிவப்பிரகாசர் இல்லத்தில் இருப்பவள் ஆக்குகிறார். இந்த ‘லாயர்’ இன்னொரு கதையில் வரும் ‘ஆயுள்வேத மருத்துவர்’ இருவரும் ‘குறிக்கோள் கதைமாந்தர்’[Ideal characters] என்ற ‘கதைமாந்தர் வகை’யில் அடக்கப்பெறுவர். யாழ்ப்பாணத்துப் பெண்கள் தங்கள் கணவர்கள் குறித்துப் பேசும் வார்த்தைகள்(213) ~ எனக்கு, இந்தியத் தமிழ்நாட்டின் முக்குலத்தோர் பேச்சு வழக்கை மிகவும் நினைவுபடுத்தியது. மிகவும் சுவாரசியமானது.. இக்கதையில் வரும் யாழ்ப்பாணத்துப் பெண்களின் பேச்சு வழக்குத்தான்.
‘கடவுளும் கோபாலப் பிள்ளையும்’ என்ற பதின்மூன்றாவது கதை, புதுமைப்பித்தனை, தன் தலைப்பால் நினைவூட்டுகிறது. ஆனால், இதில் கடவுள் வருவதில்லை. அவருடைய முகவர்/பிரதிநிதி/தூதுவர்/தொண்டன்... வருகிறார். அவரிடம் நிறையக் கேள்விகள் கேட்கிறார் கோபாலப் பிள்ளை. நமக்கும், எல்லோருக்கும் இப்படிப்பட்ட கடவுளின் தூதுவரிடம் கேள்விகள் பற்பல கேட்கவேண்டும் என்ற ஆர்வம் வரும்தான். இந்தக் கதையில், மற்ற கதைகளைப் போலல்லாமல், கடவுளின் தூதரிடமிருந்து எந்த மறுமொழியும் கிடைக்கவில்லை. “இந்த யுகத்து இன்னல்களைத் தீர்க்கப் படைத்தவனாகிய தனக்கே வழி தெரியவில்லை என்று சொல்லி நழுவுபவர்தான் இன்றைக் காலக் கடவுள் என்று சொல்கிறீர்களோ?”(189)என்று கடோசியாகக் கேட்கும்போது, வேறு வழியில்லாமல் மாயமாய் மறைந்து போகிறார். வரமாவது வாங்கியிருக்கலாமே என்று கோபாலப் பிள்ளையின் மனைவி அங்கலாய்க்கும்பொழுது, “வரம் கொடுக்கும் வல்லமை கடவுளிடம் எப்போதோ வற்றிப்போய் விட்டது. அதை மறைக்கவே தலையைக் காட்டிவிட்டுப் பெயரைக் காப்பாற்றிக்கொள்ளும் தந்திரத்தைக் கையாள்கிறார். மனிதர்கள் இனியும் அவரை அழைப்பதை மறந்துவிட்டு தமக்குள் கடவுளைத் தேடிக்கொள்ள வேண்டியதுதான் இன்றுள்ள இன்னல்கள் தீர ஒரேவழி”(190) என்று கோபாலப் பிள்ளை சொன்னாலும் “அவர்” மறைந்தபின் அவர் விட்டுப்போன வாசனை மட்டுமே வீட்டினுள் எஞ்சியிருந்தது. என் மனதில் மட்டும் ஏதோ ஒருவகையான சூனியம் படர்ந்ததுபோன்ற உணர்வு மேலிட்டது......என் மனம் ஏனோ கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருந்தது”(190) என்ற கோபாலப்பிள்ளையின் ‘நன்றிநவில்தலில்’[Thanksgiving] கதை முடிகிறது.
மதிப்புரைக் காப்புரிமை: தேவமைந்தன் (Puducherry A. Pasupathy) 10/03/2016



9.3.16

kalapathy கலாபதி: குதிரை இல்லாத ராஜகுமாரன் ~ மதிப்புரை பகுதி 2

kalapathy கலாபதி: குதிரை இல்லாத ராஜகுமாரன் ~ மதிப்புரை பகுதி 2: ‘மேலும் சில கேள்விகள்’ ‘நிழலைத் தேடும் நிழல்கள்’ ‘ஆதலினால் காமம் செய்வீர்!’ ‘சுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது?’ - இந்த நான்கு சிறுகதைக...

குதிரை இல்லாத ராஜகுமாரன் ~ மதிப்புரை பகுதி 2


‘மேலும் சில கேள்விகள்’ ‘நிழலைத் தேடும் நிழல்கள்’ ‘ஆதலினால் காமம் செய்வீர்!’ ‘சுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது?’ - இந்த நான்கு சிறுகதைகளில் காதல் உணர்வுகளும்(emotions) உணர்ச்சிகளும் (feelings) கொப்பளித்துத் ததும்புகின்றன.
‘மேலும் சில கேள்விகள்’ - ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே நிகழுகிற உள்மன நெளிவுசுளிவுகளும்; அதை அந்தத் தாயைவிட மகள் எவ்வளவு தெளிவாகக் கையாளுகிறாள் என்ற துல்லியம் ~ மீநுட்பத்துடனும் நிகழ்சமூக மனவியல் அடிப்படையுடனும் நவிலப் பெறுகின்றது. “ஸ்ருதி, இனி நீ இவரை அப்பா என்று கூப்பிடலாம்” என்று முடியும் ‘லாவண்யம்’ - பெண்மனத்துக்கே புரியக் கூடியதுங்கூட. திரைப்பட உத்திகள் இக்கதையில் அமைந்து ஒரு ‘சினிமா’வைப் பார்ப்பதுபோல வாசகரை ஆக்கிவிடுகிறது.
‘நிழலைத் தேடும் நிழல்கள்’ - கதையில் வரும் நித்யா ~ தேவனுக்காகவே என்று இருப்பவள் ~ அவள் பெற்றோர் வலுக்கட்டாயமாக சுமத்தும் மாப்பிள்ளையை மணம்செய்துகொள்ள நேர்கிறது. இடையில், தேவன் கரு நித்யாவிடம் உருவாவது, அவனுக்கும் தெரியாது. கதையின் கடைசியில்தான் தெரியவரும்...அவனுக்கே. இருபது வருடம் வரை தேவன் தனியாளாகவே இருந்து எப்படியும் தன் காதலியைப் பார்ப்போம் என்று கொள்ளும் அதீதமான தன்னம்பிக்கை, தன் குழந்தைக்கே அவன் தந்தை என்றறிவதாக நிறைவடைகிறது. இப்படி ஒரு உணர்ச்சிமிக்க மர்மத்தைக் கட்டமைக்க ராஜாஜிக்கே முடியும்.
‘ஆதலினால் காமம் செய்வீர்!’ - கதை, “காதலின் இன்னொரு பரிமாணம்தான் காமம் ............ஆதலினால் காதலும் காமம் போன்றே உன்னதமானது”[116] என்ற மேலெழுத்துகளுடன்[epigraph] தொடங்குகிறது. ஆண்மையற்றவன் தன் காதலன் என்று அறிந்த பின்பும் வெறுக்காமல், அவன் தற்கொலைக்கு முயலும் பொழுதும் அவன் நண்பனுடன் சேர்ந்து காப்பாற்றுவாள் மெனூஷா. காதல் என்று வந்துவிட்டால் அதிலும் ஒரு தர்மம் உண்டு என்று காட்டும் ஆசிரியர், தொடக்கத்தில் வரும் பத்தியையும் கதைத் தலைப்பையும் ஏன் இவ்வாறு அமைத்தார் என்பது புதிராக உள்ளது. காமம் எது காதல் எது என்று, எரிமலைக் குளிரை எள்ளி நகையாடவா? நிருஷனை விட மெனூஷா ஒருபடி உயர்ந்தவள் என்று காட்டத்தான். காமத்தை எதிர்பார்ப்பாள் தன் காதலி என்ற தன்னம்பிக்கையின்மையை விடவும் தன் காதலனின் ‘ஜீவன்’தான் உயர்ந்தது என்று நம்பும் பெண்ணம்பிக்கையின் வடிவமாகத் திகழ்கிறாள் மெனூஷா.
‘சுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது?’ - என்ற கதை மூவரைப் பற்றியது. முகுந்தன், பராசக்தி, சுபத்திரா. இம்மூவரையும் சுற்றி வருகிறது கதை. பராசக்தி அழகிதான். ஆனால் அவள் தங்கை சுபத்திராவின் அழகுக்கு முன்னால் அவள் வரமுடியாது. ஆனாலும், ஆண்கள் தன் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் என்ற அளவுக்குப் போகும் சுபத்திராவின் நினைப்பே அவள் பிழைப்பைக் கெடுக்கிறது. எப்படி? தன் அக்காள் முகுந்தனைக் காதலித்துக் கைப்பிடிக்கும் மணமேடையில் கூட, சுபத்திராவின் கருவண்டுக் கண்கள் அத்தான் முகுந்தனின் முகமலரை வட்டமிடலாமா? தன் தங்கையைக் குறித்துப் பராசக்திக்குத் தீர்மானமும் தெளிவுமுள்ளதால், தன் தங்கையின் அகந்தைஆணவங்களுக்கு கணவனை விட்டுக் கொடுப்பதில்லை என்ற திடசித்தத்துடன் திகழ்கிறாள். முகுந்தனும் சபலமற்றவனாய் விளங்குவது அவளுக்கு மேலும் வலிமைதானே? முடிவில் தன் ஆடைகளாகத் தானே வரித்துக்கொண்ட அகந்தை ஆணவச் செருக்குகளற்று, இயற்கை மேனியுடன் குளியல் தொட்டியில் மயங்கிக் கிடப்பவள், தன் உள்மனப்போர் இலக்குகளான அக்கா அத்தானாலேயே காப்பாற்றப்பெற்று மருத்துவ மனையில் மனந்தெளிகிறாள். மருத்துவர் தெளிவுறுத்துகிறார். எப்படி? இப்படி - “உங்கள் நன்றியை முதலில் உங்கள் பிரதர்-இன் -லாவுக்குச் சொல்லுங்கள்; அவர்தான் உங்களை இங்கே நேரத்தோடு கொண்டுவந்து சேர்த்தவர்.” புரிந்து கொண்டு தன் மணிகுலுங்கும் குரலில், “தேங்க்யூ, பிரதர்!” என்று கூறுவதாகக் கதை முடிகிறது. இங்கே, இந்தக் கதைக் களத்தில், எதிரும் புதிருமான பெண்மனங்களிரண்டு இராம இராவண யுத்தம் நிகழ்த்துவது ‘அட்டகாசம்.’ எல்லாவற்றிலும் உடன்பாடு எதிர்மறை இருப்பதுபோலப் பெண்மனத்திலும் இருப்பதை ராஜாஜி இதிலே சித்திரித்துள்ளார். ஆனால் முகுந்தன் இன்னொரு கதைக்கு இவர் தலைப்பிட்டிருக்கும் ‘பெளருஷம்’ கொண்டு தான் கரையேறி, தன்னைக் காதலித்துக் கைத்தலம் பற்றியவளையும் கரையேற்றி, தங்கள் நிம்மதியையே குறிவைக்கும் பெண்ணையும் கரையேற்றுகிறான். ஆண்கள் பலருடைய உள்மனம், முகுந்தனுடைய கற்பு நிலையைக் கண்டு உள்ளுக்குள் நகைத்துக் கொள்ளும் என்றாலும் பெண்கள் பலருடைய உள்மனம் முகுந்தனின் கற்புநிலையைப் பாரதிவழி ஆதரிக்கத்தான் செய்யும். ஆக, ஒரு கற்புக்கரசனை இந்தக்கதையில் நமக்கு அறிமுகம் செய்துவத்துவிட்டார் ராஜாஜி.
‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ - இதைப்பற்றி என் துணைமனத்தில், அறிந்தும் அறியாமலும், முகநூல் நண்பர்கள் + சன்றோர்களின் கருத்துகளை முதலிலேயே படியேற விட்டுவிட்டதால், அவை ‘மசானத்துப் பேய்கள்’ போல, திரும்ப என் கருத்துகளாக வேடம்போட்டு வர வாய்ப்புண்டு. ஆகவே, விதிவிலக்கான, ராஜாஜிக்குப் பிடித்துப்போன என் நோக்கில் ஒன்றைச் சொல்லுகிறேன். இதில் - ஓர் இரவுநேர எக்ஸ்பிரஸ் இருவரின் இல்லற வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. அஃறிணை என்று எதையும் தள்ளிவிட முடியாதுதானே? தொடர்வண்டிப் பயணங்களை நேசிப்பவர்கள் இல்லையா? இன்றுமென் இரவில், கனவைக் கனவென்று மட்டுமே கருத முடியாத/விரும்பாத உயிர்ப்புடன் திகழும் கனவுகளில் நான் பன்முறை பயணம் செய்த நீலகிரி எக்ஸ்பிரஸ் “தடக் தடக்” என்று பாலங் கடக்கிறது. அந்த எக்ஸ்பிரஸ் போலவே, இக்கதையில் வருவதும் இரவுநேர எக்ஸ்பிரஸ்தான். “காலத்தைக் குறைசொல்வதால் அது கோபித்துக்கொண்டு நமக்கு எதிராக எதுவும் செய்து விடாது. இதனால்தான் காலத்தையும் சிலவேளை கடவுளையும் குறை சொல்கிறோம்.”(143) விஜயா, ஆண்களின் புத்தியின் போக்குகள்(140-141) குறித்து அவதானிப்பவை ஆண்களில் பெரும்பாலோருக்குப் பொருந்தும்.
‘அந்த ஒருவனைத் தேடி’ - இந்தக் கதை, வேலைக்குப் போகும் அழகான இளம்பெண்ணுக்கு அவளுடன் பணிபுரியும் ஆண்களால் உருவாகும் உடல்ரீதியானவும் மனோரீதியானவுமான அவஸ்தைகளும்; அந்த ‘ஆண்’களிடமிருந்து ஒரு ‘பெண்’ணாக, தப்பித்துக்கொண்டே போகவேண்டிய அவலங்களும் உணர்த்தப் படுகின்றன. “ஆண்கள் என்றால் வேலைக்குப் போக வேண்டும்[‘உத்யோகம் புருஷலட்சணம்’]” என்றும் பெண்கள் அடுக்களையே கதி என்று கிடக்க வேண்டும் என்ற காலத்தைச் சேர்ந்தவளா தாரிணி? ஆனால் அவளுடைய உடல், பெண்ணுடலாயிற்றே! பெண்களுக்கு, தாம் ஸ்கூட்டரை இயக்கிச் செல்லும்பொழுதுங்கூட, ‘தன் தேகம் பெண்தேகம்’ என்ற விழிப்புணர்வு ‘டிராஃபிக் சிக்ன’லிலும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயம் இன்னும் மாறவில்லையே! “ஒருவர் நகமும் தன் உடம்பில் படாமல்” தப்பித்தலை, தாரிணியாக (203) உங்களைத் தற்பாவனை செய்துகொண்டு படித்துப் பாருங்கள்.
‘செம்பருத்தி’ கதை முற்றிலும் வித்தியாசமானது. தாலிக்கு எவரும், எந்தப் பெண்ணும் கொடுக்க மாட்டாத தெய்விகத்தை மஞ்சு கொடுப்பதை வாசித்துணரும் வாசகர்கள், ‘தாலி என்பது கயறு மட்டுந்தான்’ என்ற வாதத்தையும்; ‘மங்கலவணி என்னும் மரபெல்லாம் சுத்தப் பேத்தல்’ என்று அடித்துச்சொல்லுதலையும் அறவே விட்டு விடுவார்கள். சுசியக்கா தாலியை வழமயான ஒரு ‘சாடிஸ்ட்’ பெரியம்மா “கழற்றி வையடி” என்று ‘கோரக் கோரிக்கை’ வைக்கும்பொழுது -- மஞ்சு புருஷனின் உருவத்தோடு நாம் ‘ஆஜர்’ஆகி, வெறுமனே வேடிக்கை பார்த்து, வேதனைப் படுகிறோம்.
‘பெளருஷம்’ கதையில், ‘இலக்கணம் மீறிய கவிதை’யான ஒருத்தி, தன் தாயுடைய சம்மதத்தின்/தூண்டுதலின் பேரில் ஆடவர்களுடைய சகவாசத்துக்குத் தன் ‘சுய’த்தை வர்த்தகப் பண்டமாக்கினாலும் ~ ஒரே ஒருவனின் ‘பெளருஷ’த்துக்குமுன், தன் அம்மாவின் எச்சரிக்கையையும் மீறி, ‘தான்’ தொலைந்து போவது சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
[தொடரும்]

8.3.16

kalapathy கலாபதி: குதிரை இல்லாத ராஜகுமாரன் - மதிப்பீட்டுத் தொடர் 1

kalapathy கலாபதி: குதிரை இல்லாத ராஜகுமாரன் - மதிப்பீட்டுத் தொடர் 1: https://www.facebook.com/notes/puducherry-a-pasupathy/rajaji-rajagopalans-collection-of-short-stories-kudirai-illada-rajakumaransep-20/16874...

குதிரை இல்லாத ராஜகுமாரன் - மதிப்பீட்டுத் தொடர் 1

https://www.facebook.com/notes/puducherry-a-pasupathy/rajaji-rajagopalans-collection-of-short-stories-kudirai-illada-rajakumaransep-20/1687488481492869 ராஜாஜி ராஜகோபாலன் படைத்த சிறுகதைத் தொகுப்பு ~ ‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ [2015]
- மதிப்பீடு: புதுச்சேரி கலாவதி பசுபதி (தேவமைந்தன்)
கனடாவில் சட்டத்தரணியாகப் பணியாற்றும் ராஜாஜி ராஜகோபாலன், ஓர் ஈழத் தமிழர். முரட்டுத்தனமான ஆணாகத் தோற்றம் கொண்டுள்ள போதும், மிகுந்த மென்மையான பெண்மனத்தைச் சித்திரித்து எழுதுவதில் வல்லுநர் என்பதை இத்தொகுப்பிலுள்ள பதினைந்து சிறுகதைகளும் பறைசாற்றுகின்றன.
தமிழ்ச் சிறுகதைகளில் சமுதாயவியல் நோக்குக் கொண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் தா.வே. வீராசாமி ஐயா மேற்பார்வையில் 1980-1986 காலக்கட்டத்தில் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் ஆசியருளுடனும் டாக்டர் க.த. திருநாவுக்கரசு அவர்களின் அன்புடனும் ஆய்வு மேற்கொண்டு 24-4-1986 அன்று ஆய்வேட்டைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த எனக்கு; முனைவர் குழு எனச்சொல்லப்படும் doctoral committee -யில் வாய்த்தவர்கள் ஆணிமுத்துகள். ஒருவர், முனைவர் இரா. இளவரசு. இரண்டாமவர், முனைவர் அ.நா. பெருமாள். முதல் ஆய்வுக்குழுக் கூட்டத்திலேயே ~ தனித்தமிழ் இயக்கத்தில் மிக நெருங்கிய நண்பராக விளங்கிய பொழுதும், டாக்டர் ச.செந்தில்நாதன்+ கலாநிதி சிவத்தம்பி தொடங்கி, தமிழ் ஆங்கிலச் சிறுகதை இலக்கண நூல்கள் நாற்பத்தாறனைக் கரைத்துக் குடித்துவிடவேண்டும் என்று நீளமானதொரு பட்டியல் தந்து ‘அன்’பாகக் கட்டளையிட்டார் முனைவர் இரா. இளவரசு. அப்படிப் “பெற்ற” சிறுகதை இலக்கண அறிவை - என் சித்தத்துள் ‘அடக்க்க்க்க்க்க்க்க்கி’ வைத்துக் கொண்டு, இதை எழுதுகிறேன்.
இத்தொகுப்பில் யாழ்சூழ்தமிழான ஈழத்தமிழ் என் நொய்யல் போல் நண்பர் பேனா மனோகரனின் வையைபோல் வெகு இயல்பாகக் கரைபுரண்டோடுகிறது. உடனமர்ந்து திறனாய்வு செய்த ‘சித்தாந்த ரத்னா’ திகைத்துப் போனார். அத்தகைய சொற்களை, நானே புதுச்சேரித் தமிழில் விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது. என் பூர்விகமான கடாரத்துடன் தொடர்புகொண்டதுதானே ஈழமும்?
இந்த சட்டத்தரணி எதில் பெரிதாக வெற்றி பெறுகிறார் தெரியுமா? ‘வட்டாரத் தமிழ்’தானே என்று “சுருக்கமாக இருவரிகளில்” குழப்படி செய்யும் வறண்டமன வயிற்றெரிவுமிகு அறிவுசீவிகளை வெட்கமுறச் செய்யும் வண்ணம் தன் ஈழத்தமிழை உலகத் தமிழாக்குகிறாரே.. அதில்தான்.
உயிர்த்துடிப்புள்ள வாசகர் எவராயினும், இப்பூவுலகின் எந்த மூலையில் வாழும் ‘தமிழ் வாசிப்பு’க் கொண்டவர் எவராயினும், குறிப்பாகப் பெண்வாசகர்களும் பெண்மனம் புரிதலைக் கொண்ட ஆண் வாசகர்களும் ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் கதைகளை ஒருமுறைக்கிருமுறை வாசித்துப் பாராட்டவே செய்வார்கள். [தொடரும்]