20.11.05
வித்தியாசமாய்ச் சிந்தித்த அம்ப்ரோஸ் பியர்ஸ்
யதார்த்த உலகில் வித்தியாசமானவர்கள் பிறப்பதைப் போலவே, மொழி இலக்கிய உலகிலும்
மற்றவர்களைவிடப் பலவகைகளிலும் வேறுபாடானவர்கள் பிறக்கிறார்கள். அப்படிப் பிறந்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அம்ப்ரோஸ் பியர்ஸ் [Ambrose Bierce]. 19ஆம்
நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் அவர். மிகவும் வித்தியாசமாகச் சிந்தித்தவர். அதன் விளைவாக,
அவர் குறிப்பிட்ட பல செய்திகள், அவரைப் போலவே வேறுபாடானவைகளாகவும் -பகடி/நக்கல்/கிண்டல்/குத்தல்/நையாண்டி ஆகியவை நிரம்பியவைகளாகவும் விளங்கின. நண்பர்கள்
நச்சரித்ததால் அவற்றின் முதல் தொகுதியை 1906ஆம் ஆண்டு ''சினிக்'கின்சொல் நூல்[The Cynic's Word Book] என்ற தலைப்பில் வெளியிட இசைந்தார். பல ஆண்டுகள்
கழித்து 'இடது கை அகராதி'[The Left Hand Dictionary] என்ற தலைப்பில் எஞ்சிய சொற்கள் தொகுக்கப் பட்டு வெளியிடப்பெற்றன. அவற்றுக்கிடையில் முதல் தொகுதி ஏனோ
தலைப்பு மாற்றப்பட்டு 'சாத்தானின் அகராதி'[The Devil's Dictionary]என்று 1911ஆம் மறு பதிப்புச் செய்யப்பெற்றது. என்னதான் விளக்கினாலும் எளிதில் விளங்காதனவற்றை மிகச் சுருக்கமாக எதிராளி உள்ளத்தில்
சென்று தைக்கும் வண்ணம் சொன்ன அம்ப்ரோஸ்பியர்ஸின் சொல்வண்ணங்கள் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.
அகாதமி[Academy] = கால்பந்து ஆடமட்டும் தெரிந்தவர்களின் கழகம்.
மரணம் = முடிவு அல்ல; சொத்துக்களின்மேல் வழக்குத்தொடரப்போகிற தொடக்கம்.
சீற்றங்கள்[calamities] = இரண்டு வகை: நமக்கு ஏற்படும் துரதிர்ஷ்டங்கள் - மற்றவர்களுக்கு
ஏற்படும் நல்லதிர்ஷ்டங்கள்.
சந்தேகம் = அதே வேலையாய் இருந்தால் எதிர்மறையாகும் ஆபத்து; ஆனால், நேர்மையாகவோ
ஆய்வு ரீதியிலோ அமைந்தால் உண்மையை நிறுவக் கூடிய ஆயுதம்.
டெமாக்கிரட்டுகள்[Democrats](அமெரிக்க அரசியல் கட்சியினர்) = டெமாக்கிரட்டுகள்தாம்
முடிதிருத்தகங்களை நடத்துபவர்கள் என்று நான் எப்பொழுதுமே சொன்னதில்லை.முடிதிருத்தகங்களை நடத்துபவர்கள் எல்லோரும் டெமாக்கிரட்டுகள் என்றுதான் சொன்னேன்.
பைத்தியங்கள்/தத்துவஞானிகள் = எல்லாரும் பைத்தியக்காரர்களே. ஆனால் யாரால் தம்மைத்தாம்
ஏமாற்றிகொள்ளும் முறைகளை வகைப்படுத்திப் பார்க்க முடிகிறதோ அவர்களைத்தாம் தத்துவஞானிகள் என்று அழைக்கிறோம்.
அகம்பாவி[egotist] = மிகவும் தரக்குறைவானவர்; எப்பொழுதும் தம்மைப்பற்றி மட்டுமே அக்கறை
கொள்கிறார் -- என்மேல் அக்கறை கொள்ளாமல்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நன்றாக இருக்கிறதே இது! நன்றி.
Post a Comment