3.11.05
நான் - எனக்கு மட்டும்தான்!
குடும்பப் பாங்கானவள் நான்.
ராத்திரி,'குற்றம்' முடிய
தொடர்கள் பார்ப்பேன்.
அவசியம் வந்தால்
அதிகாலை, என் அதிகாலை -
எட்டு மணிக்கு எழுவேன்.
விடுமுறை நாள்களில்,
கணவர் - பிள்ளைகளின்
விடுமுறை நாள்களில்
பத்துக்கு எழுவதே பழக்கம்.
வேறுவழி கிடைக்காவிட்டால்
ஓரிரு நாள்கள் தேன்போல்
உறவுகள் கவனிப்பேன்.
முகம் காட்டி மூன்றாம்நாள்
கத்தரிப்பேன் - அவர் உறவினரை.
என்கணவர் எனக்குமட்டும்தான்
என்பது மட்டுமல்ல
நான்,என்சொந்தங்களுக்கு மட்டும்தான்.
தாலி ஏறும் வரைதான்
'அட்ஜஸ்ட்மெண்ட்'டுகள்.
அப்புறம் அவைஎன்
கெட்ட கனவுகள்.
யாருக்கு என்ன உதவிசெய்து
என்னத்தைக் கண்டோம்?
என்பது எனக்குள் ஞானம்.
என்னுள் திளைப்பேன்.
இன்பமாய் இருப்பேன்.
வெறுமை என்பது எனக்கில்லை.
தொலைக்காட்சியே உற்ற துணை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment