22.10.05
தங்கப்பா சொல்லும் மக்கள் பாவலர் இலக்கணம்
பாவலர் ம.இலெ.தங்கப்பா, 'பாட்டெனும் வாள் எடுப்பாய்' என்ற புதிய கவிதைத் தொகுப்பில் இப்படிச் சொல்லியிருக்கிறார்:
"மேட்டுக் குடிப் பிறந்தார் - வெற்று
மேனி மினுக்கிகள் கையிலிருந்தே
பாட்டினை மீட்டுக்கொள்வாய்!"
"ஏதிலர், மேற்படியார் - மக்கள்
இலக்கியம் படைத்திடத் தகுந்தவரோ?"
அப்படியானால் மக்கள் இலக்கியம் படைத்திடத் தகுதியுள்ளவர்கள் மேட்டுக்குடியில் பிறந்த மேனிமினுக்கிகளாக, உடுத்திய சட்டை வேட்டி குலையாதவர்களாக இருக்கக் கூடாது. மிகவும் நல்லதாகப் போயிற்று..
இப்பொழுதுள்ள பாவலர்களில் பாதிப் பேரை நம் மனப் பதிவு நிரலிலிருந்தே நீக்கிவிடலாம்
அல்லவா?
இப்புத்தகம் கிடைக்குமிடம்:
குறும்பலாப்பேரிப் பாண்டியன்
வானவில் வெளியீடு
79, முல்லைத் தெரு
கிரிசா நகர்
எரணாவூர் சென்னை - 600 057
பக்கம்:96 விலை:உரூபா 40/-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment