24.5.06

ஆன்மீகம்: வள்ளலாரின் வருத்தம்

ஆன்மீகம்: வள்ளலாரின் வருத்தம் தாம் வகுத்த விதிமுறைகளுக்கு மாறாகச் சபையில் செயல்பாடுகள் நடைபெற்றுவருவதை அறிந்த வள்ளலார் சபையைப்பூட்டி திறவுகோலைத் தம்முடன் எடுத்துக்கொண்டு மேட்டுக்குப்பத்திற்குப் போய்விட்டார். வள்ளலார் சித்திபெற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்தான், அதாவது 1878-ஆம் ஆண்டில், சன்மார்க்க அன்பர்களின் சார்பாக ஆறுபேர் கொண்ட குழுவால் சபை வழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டது. வள்ளலாரின் திருவுளப்படியே, எந்தவொரு விதியையும் மீறாமல், சபையின் நடவடிக்கைகள் இருக்கும்படி பார்த்துக்கொள்வதே நம்முன் உள்ள கடமையும், பொறுப்பும் ஆகும். இதுவே, அவருக்கு நாம் அளிக்கும் சிறப்பும், நன்றிக்கடனும் ஆகும். -சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன்

2 comments:

Vi said...

இதுபோன்ற மேலும் பல தகவல்களை எழுதுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க ஆளுண்டு. நல்ல கருத்துக்கள் பல பதிவாகட்டும்.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.