24.5.06
ஆன்மீகம்: ஜோதி தரிசனம்
ஆன்மீகம்:
ஜோதி தரிசனம்
ஜோதியைத் தரிசிப்பதற்குத் தடையாக இருக்கும் அந்த ஏழுதிரைகளும் ஒவ்வொன்றாக நீக்கப்பெற்றால் கண்ணாடியில் முழுமையான ஜோதிதரிசனம் கிடைக்கும். இதுபோல், நாமும் நம்மிடமுள்ள ஆசை முதலிய அஞ்ஞானத் திரைகள் நீங்கப்பெற்றால், ஆன்மஒளியாக அருட்பெருஞ்ஜோதியை நம் சுத்தமனத்தில் தரிசிக்கலாம். கண்ணாடி சுத்தமனதைக் குறிக்கும்.
நாள்தோறும் சபையில் பகலில் 11.30 மணிமுதல் 12.00 மணிவரையும், இரவில் 7.30 மணிமுதல் 8.00 மணிவரையும் வழிபாடு உண்டு; ஆனால், ஜோதி தரிசனம் இல்லை.
மாதப்பூச ஜோதி தரிசனம் இரவில் 8.00 மணிமுதல் 9.00 மணிக்குள் மூன்றுமுறை நிகழும். மாதப்பூசத்தன்று 6 திரைகள்மட்டும் நீக்கப்பெறும். ஆகவே, ஜோதிதரிசனம் கண்ணாடியில் பாதி அளவுக்கே தெரியும்.
தைப்பூசநாளன்று காலை 6.30, பகல் 10.00, பிற்பகல் 1.00, இரவு 7.00, இரவு 10.00, மறுநாள்காலை 5.30 மணி என்று காலம் ஒன்றுக்கு மூன்றுமுறையாக ஆறுகாலத்திற்கும் ஜோதிதரிசனம் நிகழும். அக்காலங்களில் ஏழுதிரைகளும் நீக்கப்பெறுவதால் கண்ணாடியில் ஜோதி தரிசனம் முழுமையாகத் தெரியும்.
25.1.1872 (தை 13 - வியாழக்கிழமை) அன்று, தைப்பூச நன்னாளில், சபையில் முதன்முதலாக வழிபாடு தொடங்கப்பெற்றது. மக்கள் அனைவரும் ஜோதி தரிசனத்தைக் கண்டு களித்தனர்.
-சன்மார்க்க சாதனையாளர் கோவை அ. குருநாதன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment