17.12.05
ஒரு பீனிக்சாக......
நேற்று மூண்ட
மனவன நெருப்பில்
'நான்' எரிந்து சாம்பலானது.
என் இருத்தல் என்னை
மேன்மைப் படுத்தவில்லை.
என் செல்கையோ எவருக்கும்
சோகம் ஊட்டவில்லை.
உண்மையாக வாழும்
அக்கறை இல்லாமல்
அவர்கள்
விட்டெறிந்த
அலட்சியம் என்ற நெருப்பு
நானிருந்த வனத்தையும்
வனத்திருந்த என்னையும்
ஒருசேர அழித்தொழித்தது.
என் சாம்பலில் இருந்தே
மறதிப்பெரு
இடைவெளிக்குப் பிறகு
மீண்டும் இன்று
முளைத்தெழுந்துள்ளது -
முந்தியதற்கு எல்லாம்
முந்தியதொரு
'மூல நான்.'
******
(தேவமைந்தன், 'போன்சாய் மனிதர்கள்,' திசம்பர் 1993. 17 -2 -1992 எழுதிய கவிதையின் சற்றுத் திருத்தப்பெற்ற வடிவம்.)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment