16.12.05
இடைவெளி விடாதீர்கள்!
நண்பர்களே!
இடைவெளி அற்று நின்று கொள்ளுங்கள்.
இல்லையெனில்
இடையில் எதுவாவது புகுந்துகொண்டு
இரண்டு பக்கமும் நோண்டிவிடும்.
ஆக்கபூர்வமாய் எதுவும் செய்யத் தெரியாதது'களுக்கு
கெடுப்பதைத் தவிர, செய்ய வேறுவினை என்ன உண்டு?
இடைவெளி அற்று
நடந்து கொள்ளுங்கள்!
இல்லையெனில்
இடையில் எதுவாவது புகுந்துகொண்டு
இரண்டு பக்கமும்
காதைக் கடிக்கும்.
புள்ளிக்கும் புள்ளிக்கும்
இடைவெளியற்றால்
வம்பே இல்லை.
ஒருமை வரும்.
ஒன்றே நிகழும் நன்றாய்.
******
(தேவமைந்தன், 'போன்சாய் மனிதர்கள்'['சேருங்கள்' என்ற தலைப்பு]: திசம்பர் 1993. 16-06-1989இல் எழுதிய கவிதை, மாற்றங்களுடன்.)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment