21.12.24

நானும் கவிதைகளும் - இரா.மீனாட்சி

நானும் கவிதைகளும்
- இரா.மீனாட்சி

புதுவைப் பேராசிரியர் திரு. பசுபதி அவர்கள் தொடர்ந்து எனது அந்தநாள் கவிதைகளைத் தமது வலைதளத்தில் பதிவிட்டு வருவதாக வாசிப்புக் கலையில் தேர்ந்த நண்பர்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். சரி. நாமும் நம் பங்கிற்கு நமது வாசகர்களுக்காக அந்தநாள் படைப்புகள் நெருஞ்சி (1970), சுடுபூக்கள் (1978), தீபாவளிப் பகல் (1983) தொகுப்புகளில் வெளிவந்தவற்றை இக்கார்காலச் சூழலில் பிரத்யேகமாக வாசிக்கத் தரலாமே எனும் ஆவல் பற்றி அளிக்கத் தொடங்குகிறேன்.

எழினி
•••••••••

அவள்தான் வெளியேற 
அவளே தடையாகி, 
அவலத் துடிப்பு.
மென்குரலில் வெளியழைப்பு. அவளுக்கோ அவலத்துடிப்பு கழுத்து முடிச்சு பற்றுக்கோடா? 
தடையுத்தரவு. 
முள்வேலி. 
கம்பிக்கயிறு கட்டுமானம். 
பூச்சீலை நெளிகிறது 
திரையாகி அலைகிறது துருப்பிடித்த 
சன்னலுக்குத் தெரியுமா 
சீலையின் தவிப்பு?

...

(நெருஞ்சி, 1970)
_______________________________________________

ஆசிரியர் பக்கம்
ஆரோவில் செய்தி மடல் 
நவம்பர் 2024

29.6.24

விழியிரண்டும் வெளிச்சம் பெற்று...


நான் இருக்கும் கூட்டுக் குடும்பத்தார் இல்லத்தில், என் புலன | வாட்சப் நண்பரும் பெரியண்ணனுக்கு வினைவலருமான மரமேறும் கலைஞர் திரு. முருகன் குலைகுலையாய் நுங்கு கொண்டுவந்து நடைமேல் போட்டு அத்தனை நுங்குகளையும் நோண்டிக் கொடுத்தார். 
எனக்கு கல்நுங்கு ஆகவும் பிடிக்கும். மனதுக்கேற்ப கல்நுங்குகளும் மென்னுங்குகளும் கிடைத்தன. மகளார் அறிவுரைப்படி தோலுடன் தின்றேன்.
கண்விழிகளில் படலமிட்டிருந்தது. புலனம் | வாட்சப் பார்க்கமுடியவில்லை. என் அண்ணார், மாமா அனுப்புகைகளைச் சற்று நேரம் பார்க்காதிருந்தாலே 'லுக் அவுட் நோட்டீ'சை விடுத்துவைத்துவிடுவார்கள். அந்தக் கவலையிலிருந்தவனுக்கு நுங்குகள் உள்ளே போனதும் விழிகள் பட்டப்பளிச்சென்று படலம்நீங்கின.
'சற்றே நகரும் பிள்ளாய்!' என்று எனக்குள் திணிபட்டிருந்த அறிவியல் நந்திக்கு ஆணையிட்டேன். எனக்குள் கலா Kalavathy P. இருந்து என் உடல் மூலம் தனக்கு மிகவும் விருப்பமான நுங்குகளை இரசித்துத் தின்றார் எனத் தோன்றுகின்றது.

# பனைஇருந்தால்நுங்கூட்டும்செத்தால்கிழங்கூட்டும்

#நுங்கு #பனை #தேவமைந்தன் #பனங்கிழங்கு #palmira #nungu #Roots

6.5.24

Digital life

எவ்வளவோ படிக்கிறோம். எவ்வளவோ எழுதுகிறோம். எவ்வளவோ புத்தகங்கள் வெளியிடுகிறோம். சமூக வலைதளங்களில் பதிவுகள் பல பதிகிறோம். உண்மையாகவே உழைத்து தரவுகள் மிகுந்தவையாக பதியும் பதிவுகளுக்கு மதிப்பில்லை. வெற்று ஆரவாரம், சவடால், கொச்சை, தனிமனிதர் வழிபாடு, பிறந்த நாள், திருமண நாள் , இறப்பு தொடர்பான பதிவுகளுக்கு மட்டுமே பார்வைகள் அதிகம். முன்பெல்லாம் பெண்கள் பதிவிட்டால் அதற்கு அமோகமான ஆதரவு இருந்து வந்தது. இப்பொழுது அதுவும் குறைந்துவிட்டது. பொதுவாகவே வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் சிறந்தவற்றுக்கு இப்பொழுது உரிய மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. ஒருவரை ஒருவர் உண்மையாக நேசிப்பது என்பது அறவே இல்லை. கூடுமானவரை பேச்சைக் குறைத்துக் கொண்டு சைகைகளிலேயே செயல்களை முடித்துக் கொள்கிறார்கள். எல்லாம் டிஜிட்டல் ஆகிவிட்டன.