19.5.10

பரிதிமாற்கலைஞர் தம் பெயரைத் தனித்தமிழ்ப் பற்றினால் மாற்றிக்கொள்ளவில்லை

ஐயா. வணக்கம். பரிதிமாற்கலைஞர் தம் பெயரைத் தனித்தமிழ்ப்பற்றினால் மாற்றிக்கொண்டு மறைமலையடிகளுக்கு முன்னோடியாக இருந்தார் என்று புதியதலைமுறை கட்டுரையில் கண்டேன். புதிய தலைமுறைக்குப் பிழையான செய்தி போய் விடக்கூடாது. மறைமலையடிகளும் பாவாணரும் இது போலவே நம்பி எழுதியீருக்கின்றனர். வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் என்னும் பெயரை அவர் தனித்தமிழ்ப் பற்றினால் மாற்றிக்கொள்ளவில்லை. புனைபெயராகவே பயன்படுத்தினார். அதுவும் தனிப்பாசுரத்தொகை என்னும் ஒரு நுாலில் மட்டுமே அப்பெயரைப் பயன்படுத்தினார். அவர் தன் படைப்பின் தன்மையை முழுமையாகப் படிப்பவர் வாயிலாகத் தெரிந்துகொள்ளும் நோக்கத்திற்காகப்பரிதிமாற்கலைஞர் என்னும் பெயரைப் பயன்படுத்தியதாக அந்நுாலில் குறித்துள்ளார். எனவே தமிழ்ப்பற்றால் பெயரை மாற்றிக் கொண்டார் என்பது சரியன்று. அவர் தமிழ்ப்பற்று இரு வகைகளில் சிறந்தது. அவர், பார்ப்பனர்களால் தான் தமிழ் கெட்டது என்பதைத்தமிழ்மொழி வரலாறு என்னும் நுாலில் மறைக்காமல் எழுதியுள்ளார். தமிழ் தனித்தியங்க வல்லது என்னும் கருத்தையும் அவர் வலியுறுத்தினார். ஆனால் தனித்தமிழ்ப்பற்றினால் பெயரை மாற்றிக்கொண்டார் என்னும் செய்தி பரவி விட்டது. அன்புடன், முனைவர் க.தமிழமல்லன்

5 comments:

மதன்செந்தில் said...

தாங்களின் படைப்புகளுக்கு வாழ்த்துக்கள்.. மேலும் தங்களின் படைப்புகளை எங்களுடனும் பகிந்து கொள்ளுங்கள்

www.narumugai.com
நமக்கான ஓரிடம்

Ganesh said...

அன்பர் திரு பசுபதி அவர்களே, வணக்கம். நானும் தங்களை போன்றே தமிழ் மீது தணியா தாகம் கொண்டவன். தங்களின் பகுதியில் நான் கண்ட தகவல்கள் அணைத்தும் என்னை கவர்ந்தன. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள "தமிழ் வரலாறு" என்ற நூல் எங்கு கிடைக்கும் என்று தெரிவிக்கவும். இது நீங்கள் எனக்கு செய்யும் பேருதவியாய் இருக்கும். மீண்டும் எனது நன்றிகள்.

வாழ்த்துக்களுடன்,

கணேஷ்.

நா.பூ.பெரியார்முத்து said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி

www.periyarl.com - பகலவன் திரட்டிஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

அ. பசுபதி said...
This comment has been removed by the author.
அ. பசுபதி said...

அன்பர் திரு கணேஷ்அவர்களே!வணக்கம்.

'தமிழ்மொழி வரலாறு' நூல் வெளியே கிடைக்கிறதா என்று தெரியவில்லை. நண்பர் இல்லத்தின் நூலகத்திலிருந்து செய்தி பெறப்பட்டுள்ளது.

அன்புடன்,
தேவமைந்தன்