உறுவது சீர்தூக்கு[ம்] நட்பும் பெறுவது
கொள்வாருங் கள்வரு[ம்] நேர்
(திருக்குறள். தீ நட்பு 3)
நட்பின் அளவைப் பாராமல், அந்நட்பால் தமக்கு வரும் பயனின் அளவை மட்டுமே நோக்கும் நண்பரும்; கொடுப்பவர் குணத்தைக் கருத்தில் கொள்ளாது, அவர் கொடுக்கும் பொருளின் அளவை மட்டுமே கவனத்திற் கொள்ளும் பொதுமகளிரும்; பிறர் அடையவுள்ள கேடு நோக்காது, அவர் சோர்ந்திருப்பதை மட்டுமே அவதானிக்கும் கள்வரும் --- தம்முள் ஒரே இயல்பை உடையவர்களே!
கொடுக்கும் பொருள் - விலை. இதனாலேயே கணிகையர்களுக்கு (தாசிகள்) விலைமாதர் என்ற பெயர் வந்தது. தீய நண்பர்கள் பயனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வஞ்சித்து நடந்து கொள்வதால் விலைமாதர் கள்வர் ஆகியோரோடு ஒப்பாயினர்.
No comments:
Post a Comment