23.3.22

திருக்குறள் ஒப்புமை காட்டும் தீயநட்பு வகை

உறுவது சீர்தூக்கு[ம்] நட்பும் பெறுவது
கொள்வாருங் கள்வரு[ம்] நேர்

(திருக்குறள். தீ நட்பு 3)

நட்பின் அளவைப் பாராமல்,  அந்நட்பால் தமக்கு வரும் பயனின் அளவை மட்டுமே நோக்கும் நண்பரும்; கொடுப்பவர் குணத்தைக் கருத்தில் கொள்ளாது, அவர் கொடுக்கும் பொருளின் அளவை மட்டுமே கவனத்திற் கொள்ளும் பொதுமகளிரும்; பிறர் அடையவுள்ள கேடு நோக்காது, அவர் சோர்ந்திருப்பதை மட்டுமே அவதானிக்கும் கள்வரும் --- தம்முள் ஒரே இயல்பை உடையவர்களே!

கொடுக்கும் பொருள் - விலை. இதனாலேயே கணிகையர்களுக்கு (தாசிகள்) விலைமாதர் என்ற பெயர் வந்தது. தீய நண்பர்கள் பயனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வஞ்சித்து நடந்து கொள்வதால் விலைமாதர் கள்வர் ஆகியோரோடு ஒப்பாயினர்.

26.10.21

சாதி சமய சழக்கை விட்ட ஆல்வள்ளி...

 *சாதிசமயச் சழக்கு*கள் இல்லாத ஆல்வள்ளி, தோட்டத்தில் தென்னையின்மேல் *விட்டு விடுதலையாக*ப் படர்ந்திருக்கிறது.

#உயர்பிறவி

24.10.21

"நா! காந்தி பக்தனுங்கோ..."

அண்மையில் திருவாளர் சுப்பிரமணியன் சுவாமி காந்தியடிகளை 'பிராமணர்' என்று தன் ஆய்வுப் பேச்சொன்றில் சொல்லியுள்ளார். திருவாளர் சொக்கு சுப்பிரமணியன் புதுச்சேரியில் நடத்திய 'வண்ணங்கள்' என்ற சிற்றேட்டின் சிறப்பு வெளியீடான 'ஊமைக் காயங்கள்' என்ற கையேட்டில் இச்சேதியை - 'நா! காந்தி பக்தனுங்கோ...' என்ற கவிதைவழி நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே புலப்படுத்தியுள்ளேன். இதை என் கவனத்துக்குக்ண கொண்டு வந்தவர் புதுச்சேரி உளவியல் மருத்துவர் எஸ்.இலட்சுமணன் அவர்கள்.அவருக்கு மிக்க நன்றி. - தேவமைந்தன்

31.7.20

கவி கோ.கமலக்கண்ணன் நூலுக்கு தமிழ்மாமணி க.நாராயணன் அணிந்துரை

*திருக்களாச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் புகழ்மாலை* இயற்றியவர் கவி கோ.கமலக்கண்ணன் @Kamalakkannan Govindhan அணிந்துரை தமிழ்மாமணி பேராசிரியர் டாக்டர் க.நாராயணன், M.A(Phil),M.A(Psych),M.Ed,Phd., புதுச்சேரி-18-04-2001 --------------------------------------------------------------------------------------------------------------------- #உலகம், தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கதிரவனைச் சுற்றி வருகிறது என்பது அறிவியல் உண்மை.தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் இரவு,பகல் போன்ற மாற்றங்களும் கதிரவனைச் சுற்றி வருவதால் வெப்பம், காற்று ,மழை பருவகாலம் போன்ற மாற்றங்களும் புறத்தளவில் நிகழ்கின்றன.இம்மாற்றங்களுக்கேற்ப மனிதன் தன் புறத்தளவில் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கிறான். அறிவியல் வளர்ச்சியும் தொழில்துறை நுட்பங்களும் மனித வாழ்வில் அளப்பரிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன.சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த மனித வாழ்க்கைச் சூழலையும் இன்றுள்ள மனித வாழ்க்கைச் சூழலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மனித வாழ்க்கை வியத்தகு மாற்றங்களினூடே நடந்து வந்திருப்பதை உணரக்கூடும்.இத்தகைய மாற்றங்களினூடே நடந்து வந்த மனிதன் பலவற்றை இழந்திருக்கிறான்.சிலவற்றை மறந்திருக்கிறான்.சிலவற்றைப் புதிதாக உருவாக்கிக் கொண்டுள்ளான்.இத்துணை மாற்றங்களினூடேயும் மனிதனின் இறைநம்பிக்கையும் அதன் வெளிப்பாடான ஆன்மிகமும் பக்தியும் மாறாதிருக்கின்றன. இறைமறுப்பாளர்கள் கூட ஆன்மிகம் என்ற போர்வையில் தம் துன்பக்குளிரைப் போக்கிக்கொள்ள முற்படுகின்றனர். ஆன்மிகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பக்தி எனும் நீள்வட்டப் பாதைவழி இறை நம்பிக்கை எனும் கதிரவனை சுற்றி வருகிறதெனலாம்.ஆன்மிகம் எனும் தற்சுழச்சி இல்லை என்றால் பக்தி எனும் நடைபாதை பயனற்று புதர்கள் மண்டிப் பாழ்பட்டுப் போய்விடும்.பக்தி எனும் பாதை இல்லை என்றால் ஆன்மிகம் செல்லும் திசையறியாத வீண்பயணம் ஆகிவிடும்.இறை நம்பிக்கையைச் சுற்றிச் செல்லாத ஆன்மிகமும் பக்தியும் மனித மனத்தைச் செம்மைப் படுத்தாத வெற்றுச் சடங்குகளாகிவிடும். புறத்தளவில் பரபரப்பும் அகத்தளவில் மன உளைச்சலும் மிகுந்ததாக இன்றைய மனித வாழ்க்கை அமைந்துள்ளது.பணப்பெருக்கம் ,பொருள்வசதி எனப் பரபரப்பாக அலையும் மனிதனை நிலைப்படுத்தவும் மனப்புழுக்கத்தில் ஆழ்ந்து மூச்சுத்திணரும் மனிதனை அமைதிப்படுத்தவும் ஆன்மிகமும் ஒழுக்கமான பக்தியும் இன்றி வேறு வழியில்லை . உண்மையான ஆன்மிகமும் ஒழுக்கமான பக்தியும் மனிதனுக்கு அமைதியையும் உள்ளார்ந்த ஆனந்தத்தையும் தரும். ஆன்மிக நெறியையும்,பக்தி நெறியையும் செம்மைப்படுத்திச் சீர்தூக்கும் நிலையான முயற்சியில் ஈடுபட வேண்டும்.சமுதாயத்தின் பல துறைகளிலும் நன்னெறி தழைக்க வழிகாண வேண்டும்.அத்தகைய முயற்சிகளுள் ஒன்றுதான் ஆன்மிகம்,பக்தி ஆகிய நெறிகளைச் சார்ந்த நூல்கள் எழுதி வெளியிடுவது ஆகும்.இந்த அரிய முயற்சிக்கு ஒரு படியாக அமைவது என் இனிய நண்பர் கவி கோ.கமலக்கண்ணன் அவர்கள் எழுதியுள்ள 'திருக்களாச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் புகழ்மாலை' எனும் இந்நூல் ஆகும். நூலாசிரியர் கமலக்கண்ணன் இந்நூலைப் பத்ரகாளியம்மன் வரலாறு,அற்புதங்கள்,புகழ்மாலை,போற்றிப் பாடல்கள்,சரணம் ஆகிய ஐந்து பகுதிகளாக அமைத்து எழுதியுள்ளார்.பத்ரகாளியம்மன் திருக்களாச்சேரியில் எழுந்தருளிய வரலாற்றையும் அன்னைக்கு ஆலயம் எழுப்பப்பட்ட அரிய செயலையும் அன்னையவள் அன்பர்கள் பலரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களையும்,அன்னையை வழிபட வகை செய்யும் போற்றிப் பாடல்களையும் அன்னையின் பெருமையைக் கூறும் புகழ்ப்பாடல்களையும் கூறிப் படிப்போர் நெஞ்சில் பக்தியையும் பத்ரகாளியைக் காணவேண்டும் என்ற வேட்கையையும் தருவதாக இந்நூல் அமைந்துள்ளது.எனவே இந்நூலைத் திருக்களாச்சேரி *பத்ரகாளியம்மன் ஆற்றுப்படை* என்றும் கொள்ளலாம் திரு.கமலக்கண்ணன் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதை இந்நூல் வழி அறிய முடிகிறது.அவருடைய மொழிப்பற்று இந்நூலில் பத்ரகாளியம்மன் புகழ்மாலை என்ற பகுதியில் பல்வேறு இடங்களில் பளிச்சிடுகிறது.எடுத்துக்காட்டாக சிலவற்றைக் கூறலாம். 'இன்பத்தமிழில் இசைபாடி'(8) 'பழகு தமிழில் பாட்டெழுதி'(15) 'உருகித் தமிழில் துதிபாட'(36) 'கரும்பில் தேனைக் கலந்தெடுத்துத் தருமென் மொழியே'(40)'தென்பால் தமிழால் உனைப்பாடும்'(41) தமிழைக் குணமாய்க் கொண்டவளே'(44) 'நல்ல தமிழால் நாமுறைப்போம்'(54) 'தெள்ளுதமிழால் வழிபட்டால்'(86) 'செந்தமிழ்ப் பாட்டில் மயங்கிடுவாள்'(104) இத்தொடர்களெள்ளாம் ஆசிரியர் கொண்டுள்ள மொழிப்பற்றுக்குச் சான்று பகர்வனவாக அமைந்துள்ளன. கடவுளுக்கு உருவம் உண்டா?இல்லையா? என்ற வினா ஓயாது ஒளிக்கின்ற வினா.உண்டென்பாரும் இல்லை என்பாரும் தத்தம் புலமைக்கேற்ப வாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.இதுவெறும் வாதத்தோடு நிற்காமல் சில மனிதர்களை நாகரிகமற்ற செயல்களுக்கும் இழுத்துச் சென்றுவிடுவதைக் காண்கிறோம். ஒருபொருள்,உருவமாகவும் இருக்கக்கூடும் அருவமாகவும் இருக்கக்கூடும் என்பதை இயற்பியல் அறிவியல் ஏற்றுக் கொள்கிறது.தலவரலாற்றைக் கூறும் ஆசிரியர் திருக்களாச்சேரி பத்ரகாளியம்மன் அருவ,உருவ,அருவுருவ நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாங்கினை சிறப்பாகப் பொருத்திக் காட்டியுள்ளார்.பத்ரகாளி அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பதை அருவநிலை என்றும்,பூசைவிழாவின் போது அருள்பாலிப்பதை உருவநிலை என்றும் பூசைவிழா முடிந்தபின் பேழையுள் இருந்து அருள்தருவதை அருவுருவ நிலை என்றும் ஆசிரியர் பொருத்திக் காட்டுவது பாராட்டிற்குரியது. 'அவனருளாலே அவன்தாள் வணங்கி' என்று மாணிக்கவாசகர் கூறுவது போல இறைவனை வணங்கவும் வழிபடவுங்கூட இறைவன் அருள் இருந்தால்தான் இயலும்,வாய்ப்புகள் இருந்தும் பொருள்வசதி இருந்தும் இறைவனின் அருட்பார்வை இல்லையெனின் இறைவனை வணங்க இயலாது என்பது மாணிக்கவாசகர் கருத்து.நூலாசிரியருக்கு அன்னையின் அருள் வழிகாட்டியாக இருந்திருக்கிறது.இவ்வருளே அன்னையின் அருள்பெற்றுப் பயனுற்ற பலரை நூலாசிரியருக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.அடியவரைக் காண்பது ஆண்டவனைக் காண்பதிலும் சிறந்தது என்பர்.திரு.கமலக்கண்ணன் அன்னையின் அருள்பெற்ற பல அடியவர்களின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.இவ்வற்புதங்கள் வாயிலாக அன்னையின் அருள் பலருக்கும் கிட்ட நூலாசிரியர் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறார். பத்ரகாளியம்மனின் பல்வேறு திருப்பெயர்களையும் குணங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் எழுதியுள்ள போற்றிப்பாடல் பலவகையிலும் சிறப்புடையது.பக்தனின் உணர்வை இறைவன் அறிந்து கொள்ள மொழி தேவையே இல்லை.இறைவன் உள்ளத்தின் உள்ளெழும் உணர்வுகளைக் காண்கிறானே தவிர உதட்டிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைக் கேட்பதில்லை.மொழி வழியாகத் தன் உணர்வுகளைக் கொட்டுவது மனிதனின் இயல்பு.அவரவர் அறிந்த மொழியிலே உணர்வுகளை வெளிப்படுத்தி வழிபடுவதே இயல்பான வழி.இந்த மொழிதான் உகந்தது என்று கூறி ஒரு மொழியை உயர்த்தியும் பிற மொழியைத் தாழ்த்தியும் பேசுவது மனிதனின் அறியாமையையும் குறுகிய மனப்பான்மையையும் காட்டுகிறது.பொருளறிவு வாராத மழலைச் சொல்லிலும் மானுடத்தாய் மகிழ்வதைக் காண்கிறோம்.பால்நினைந்தூட்டும் தெய்வத்தாய் நாம் எண்ணினாலே புரிந்துகொண்டு அருள்செய்வாள் எனின் தமிழில் வேண்டினால் செவிசாய்க்க மாட்டாளா? தமிழில் வழிபாடு செய்ய ஊக்கம்தரும் வகையில் இப்போற்றிப் பகுதியில் உள்ள பாடல்கள் இயற்றப்பட்டன. அகவழிபாடாகவோ புறவழிபாடாகவோ அன்னையின் திருவடிகளில் மலர்கள் தூவியோ குங்குமம் தூவியோ வழிபாடு செய்ய விரும்பும் அன்பர்கட்குத் துணை செய்யும் வகையில் அழகிய தமிழில் 'போற்றி போற்றி'என முடியும் வண்ணம் துதிப்பாடலை இயற்றியுள்ளார்.இப்பாடலை அன்பர்கள் அன்றாட வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம். புகழ்மாலையில் உள்ள பாடல்கள் கருத்துச் செறிவும் ,சொல்வளமும் ஓசைநயமும் உள்ளவை.உள்ளதை உள்ளவாறு பிறர் உணரும் வண்ணம் கூறுவது அரிய கலை.ஆசிரியருக்கு உள்ள இந்த ஆற்றல் நூலின் பல பாடல்களில் வெளிப்பட்டாலும் குறிப்பாக பூசைநாளில் பத்ரகாளியின் அலங்காரத்தை விவரிக்கும் போது சிறப்பாக வெளிப்படுகிறது.பூசைநாளில் திருக்களாச்சேரி செல்ல இயலாதவர்களும்,செல்ல வாய்ப்பில்லாதவரும்,சென்றாலும் அருகிருந்து கண்டுகளிக்க முடியாதவரும் தம் மனக்கண்ணால் கண்டுகளிக்கும் வண்ணம் அழகாக உரைத்துள்ளார். சொல்வளமும் கருத்தாழமும் மிக்க பாடல்கள் பல இருப்பினும் என் இதயத்துள் சென்று குறுதியில் கலந்த இரு பாடல்களை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சேற்றில் உழன்ற பாவியென்னைத் தேற்றிக் கரும வினையகற்றிப் போற்றிப் பாட வைத்தவளே ஏற்றி வைத்தேன் இதயத்தில் (63) தாயினும் மேலாய்ப் பரிந்தென்றன் வாயினால் பாடத் தமிழ்தந்தாய் ஓய்விலா துனையே நினைக்கின்ற தேய்விலா அறிவைத் தந்திடம்மா (85) கருத்தோட்டமும் ஓசைநயமும் மிக்க பாடல்களும் புகழ்மாலைப் பகுதியில் நிறைந்துள்ளன.பின்வரும் இரு பாடல்களும் வாய்விட்டுப் படிக்கும் போது என் செவிவழி புகுந்து உள்ளத்திற்கு இன்பம் தந்தன.சான்றுக்காக அவற்றைக் குறிப்பிடுகின்றேன். துடித்தேன் துன்பம் மனம்பிழிய வடித்தேன் கண்ணீர் விழிவழிய படித்தேன் அமுதாய் நீவந்தாய் பிடித்தேன் பாதம் நீகாத்தாய்(47) எப்பிழை புரிந்துநான் இருந்தாலும் அப்பிழை பொறுத்திடும் அம்மைநீ எப்பிறப் பெடுத்துநான் வந்தாலும் அப்பனும் அம்மையும் நீயம்மா(81) அன்பன் க.நாராயணன் *திருக்களாச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் புகழ்மாலை* இயற்றியவர் கவி கோ.கமலக்கண்ணன் @Kamalakkannan Govindhan அணிந்துரை தமிழ்மாமணி பேராசிரியர் டாக்டர் க.நாராயணன், M.A(Phil),M.A(Psych),M.Ed,Phd., புதுச்சேரி-18-04-2001 உலகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கதிரவனைச் சுற்றி வருகிறது என்பது அறிவியல் உண்மை.தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் இரவு,பகல் போன்ற மாற்றங்களும் கதிரவனைச் சுற்றி வருவதால் வெப்பம், காற்று ,மழை பருவகாலம் போன்ற மாற்றங்களும் புறத்தளவில் நிகழ்கின்றன.இம்மாற்றங்களுக்கேற்ப மனிதன் தன் புறத்தளவில் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கிறான். அறிவியல் வளர்ச்சியும் தொழில்துறை நுட்பங்களும் மனித வாழ்வில் அளப்பரிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன.சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த மனித வாழ்க்கைச் சூழலையும் இன்றுள்ள மனித வாழ்க்கைச் சூழலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மனித வாழ்க்கை வியத்தகு மாற்றங்களினூடே நடந்து வந்திருப்பதை உணரக்கூடும்.இத்தகைய மாற்றங்களினூடே நடந்து வந்த மனிதன் பலவற்றை இழந்திருக்கிறான்.சிலவற்றை மறந்திருக்கிறான்.சிலவற்றைப் புதிதாக உருவாக்கிக் கொண்டுள்ளான்.இத்துணை மாற்றங்களினூடேயும் மனிதனின் இறைநம்பிக்கையும் அதன் வெளிப்பாடான ஆன்மிகமும் பக்தியும் மாறாதிருக்கின்றன. இறைமறுப்பாளர்கள் கூட ஆன்மிகம் என்ற போர்வையில் தம் துன்பக்குளிரைப் போக்கிக்கொள்ள முற்படுகின்றனர். ஆன்மிகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பக்தி எனும் நீள்வட்டப் பாதைவழி இறை நம்பிக்கை எனும் கதிரவனை சுற்றி வருகிறதெனலாம்.ஆன்மிகம் எனும் தற்சுழச்சி இல்லை என்றால் பக்தி எனும் நடைபாதை பயனற்று புதர்கள் மண்டிப் பாழ்பட்டுப் போய்விடும்.பக்தி எனும் பாதை இல்லை என்றால் ஆன்மிகம் செல்லும் திசையறியாத வீண்பயணம் ஆகிவிடும்.இறை நம்பிக்கையைச் சுற்றிச் செல்லாத ஆன்மிகமும் பக்தியும் மனித மனத்தைச் செம்மைப் படுத்தாத வெற்றுச் சடங்குகளாகிவிடும். புறத்தளவில் பரபரப்பும் அகத்தளவில் மன உளைச்சலும் மிகுந்ததாக இன்றைய மனித வாழ்க்கை அமைந்துள்ளது.பணப்பெருக்கம் ,பொருள்வசதி எனப் பரபரப்பாக அலையும் மனிதனை நிலைப்படுத்தவும் மனப்புழுக்கத்தில் ஆழ்ந்து மூச்சுத்திணரும் மனிதனை அமைதிப்படுத்தவும் ஆன்மிகமும் ஒழுக்கமான பக்தியும் இன்றி வேறு வழியில்லை . உண்மையான ஆன்மிகமும் ஒழுக்கமான பக்தியும் மனிதனுக்கு அமைதியையும் உள்ளார்ந்த ஆனந்தத்தையும் தரும். ஆன்மிக நெறியையும்,பக்தி நெறியையும் செம்மைப்படுத்திச் சீர்தூக்கும் நிலையான முயற்சியில் ஈடுபட வேண்டும்.சமுதாயத்தின் பல துறைகளிலும் நன்னெறி தழைக்க வழிகாண வேண்டும்.அத்தகைய முயற்சிகளுள் ஒன்றுதான் ஆன்மிகம்,பக்தி ஆகிய நெறிகளைச் சார்ந்த நூல்கள் எழுதி வெளியிடுவது ஆகும்.இந்த அரிய முயற்சிக்கு ஒரு படியாக அமைவது என் இனிய நண்பர் கவி கோ.கமலக்கண்ணன் அவர்கள் எழுதியுள்ள 'திருக்களாச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் புகழ்மாலை' எனும் இந்நூல் ஆகும். நூலாசிரியர் கமலக்கண்ணன் இந்நூலைப் பத்ரகாளியம்மன் வரலாறு,அற்புதங்கள்,புகழ்மாலை,போற்றிப் பாடல்கள்,சரணம் ஆகிய ஐந்து பகுதிகளாக அமைத்து எழுதியுள்ளார்.பத்ரகாளியம்மன் திருக்களாச்சேரியில் எழுந்தருளிய வரலாற்றையும் அன்னைக்கு ஆலயம் எழுப்பப்பட்ட அரிய செயலையும் அன்னையவள் அன்பர்கள் பலரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களையும்,அன்னையை வழிபட வகை செய்யும் போற்றிப் பாடல்களையும் அன்னையின் பெருமையைக் கூறும் புகழ்ப்பாடல்களையும் கூறிப் படிப்போர் நெஞ்சில் பக்தியையும் பத்ரகாளியைக் காணவேண்டும் என்ற வேட்கையையும் தருவதாக இந்நூல் அமைந்துள்ளது.எனவே இந்நூலைத் திருக்களாச்சேரி *பத்ரகாளியம்மன் ஆற்றுப்படை* என்றும் கொள்ளலாம் திரு.கமலக்கண்ணன் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதை இந்நூல் வழி அறிய முடிகிறது.அவருடைய மொழிப்பற்று இந்நூலில் பத்ரகாளியம்மன் புகழ்மாலை என்ற பகுதியில் பல்வேறு இடங்களில் பளிச்சிடுகிறது.எடுத்துக்காட்டாக சிலவற்றைக் கூறலாம். 'இன்பத்தமிழில் இசைபாடி'(8) 'பழகு தமிழில் பாட்டெழுதி'(15) 'உருகித் தமிழில் துதிபாட'(36) 'கரும்பில் தேனைக் கலந்தெடுத்துத் தருமென் மொழியே'(40)'தென்பால் தமிழால் உனைப்பாடும்'(41) தமிழைக் குணமாய்க் கொண்டவளே'(44) 'நல்ல தமிழால் நாமுறைப்போம்'(54) 'தெள்ளுதமிழால் வழிபட்டால்'(86) 'செந்தமிழ்ப் பாட்டில் மயங்கிடுவாள்'(104) இத்தொடர்களெள்ளாம் ஆசிரியர் கொண்டுள்ள மொழிப்பற்றுக்குச் சான்று பகர்வனவாக அமைந்துள்ளன. கடவுளுக்கு உருவம் உண்டா?இல்லையா? என்ற வினா ஓயாது ஒளிக்கின்ற வினா.உண்டென்பாரும் இல்லை என்பாரும் தத்தம் புலமைக்கேற்ப வாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.இதுவெறும் வாதத்தோடு நிற்காமல் சில மனிதர்களை நாகரிகமற்ற செயல்களுக்கும் இழுத்துச் சென்றுவிடுவதைக் காண்கிறோம். ஒருபொருள்,உருவமாகவும் இருக்கக்கூடும் அருவமாகவும் இருக்கக்கூடும் என்பதை இயற்பியல் அறிவியல் ஏற்றுக் கொள்கிறது.தலவரலாற்றைக் கூறும் ஆசிரியர் திருக்களாச்சேரி பத்ரகாளியம்மன் அருவ,உருவ,அருவுருவ நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாங்கினை சிறப்பாகப் பொருத்திக் காட்டியுள்ளார்.பத்ரகாளி அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பதை அருவநிலை என்றும்,பூசைவிழாவின் போது அருள்பாலிப்பதை உருவநிலை என்றும் பூசைவிழா முடிந்தபின் பேழையுள் இருந்து அருள்தருவதை அருவுருவ நிலை என்றும் ஆசிரியர் பொருத்திக் காட்டுவது பாராட்டிற்குரியது. 'அவனருளாலே அவன்தாள் வணங்கி' என்று மாணிக்கவாசகர் கூறுவது போல இறைவனை வணங்கவும் வழிபடவுங்கூட இறைவன் அருள் இருந்தால்தான் இயலும்,வாய்ப்புகள் இருந்தும் பொருள்வசதி இருந்தும் இறைவனின் அருட்பார்வை இல்லையெனின் இறைவனை வணங்க இயலாது என்பது மாணிக்கவாசகர் கருத்து.நூலாசிரியருக்கு அன்னையின் அருள் வழிகாட்டியாக இருந்திருக்கிறது.இவ்வருளே அன்னையின் அருள்பெற்றுப் பயனுற்ற பலரை நூலாசிரியருக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.அடியவரைக் காண்பது ஆண்டவனைக் காண்பதிலும் சிறந்தது என்பர்.திரு.கமலக்கண்ணன் அன்னையின் அருள்பெற்ற பல அடியவர்களின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.இவ்வற்புதங்கள் வாயிலாக அன்னையின் அருள் பலருக்கும் கிட்ட நூலாசிரியர் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறார். பத்ரகாளியம்மனின் பல்வேறு திருப்பெயர்களையும் குணங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் எழுதியுள்ள போற்றிப்பாடல் பலவகையிலும் சிறப்புடையது.பக்தனின் உணர்வை இறைவன் அறிந்து கொள்ள மொழி தேவையே இல்லை.இறைவன் உள்ளத்தின் உள்ளெழும் உணர்வுகளைக் காண்கிறானே தவிர உதட்டிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைக் கேட்பதில்லை.மொழி வழியாகத் தன் உணர்வுகளைக் கொட்டுவது மனிதனின் இயல்பு.அவரவர் அறிந்த மொழியிலே உணர்வுகளை வெளிப்படுத்தி வழிபடுவதே இயல்பான வழி.இந்த மொழிதான் உகந்தது என்று கூறி ஒரு மொழியை உயர்த்தியும் பிற மொழியைத் தாழ்த்தியும் பேசுவது மனிதனின் அறியாமையையும் குறுகிய மனப்பான்மையையும் காட்டுகிறது.பொருளறிவு வாராத மழலைச் சொல்லிலும் மானுடத்தாய் மகிழ்வதைக் காண்கிறோம்.பால்நினைந்தூட்டும் தெய்வத்தாய் நாம் எண்ணினாலே புரிந்துகொண்டு அருள்செய்வாள் எனின் தமிழில் வேண்டினால் செவிசாய்க்க மாட்டாளா? தமிழில் வழிபாடு செய்ய ஊக்கம்தரும் வகையில் இப்போற்றிப் பகுதியில் உள்ள பாடல்கள் இயற்றப்பட்டன. அகவழிபாடாகவோ புறவழிபாடாகவோ அன்னையின் திருவடிகளில் மலர்கள் தூவியோ குங்குமம் தூவியோ வழிபாடு செய்ய விரும்பும் அன்பர்கட்குத் துணை செய்யும் வகையில் அழகிய தமிழில் 'போற்றி போற்றி'என முடியும் வண்ணம் துதிப்பாடலை இயற்றியுள்ளார்.இப்பாடலை அன்பர்கள் அன்றாட வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம். புகழ்மாலையில் உள்ள பாடல்கள் கருத்துச் செறிவும் ,சொல்வளமும் ஓசைநயமும் உள்ளவை.உள்ளதை உள்ளவாறு பிறர் உணரும் வண்ணம் கூறுவது அரிய கலை.ஆசிரியருக்கு உள்ள இந்த ஆற்றல் நூலின் பல பாடல்களில் வெளிப்பட்டாலும் குறிப்பாக பூசைநாளில் பத்ரகாளியின் அலங்காரத்தை விவரிக்கும் போது சிறப்பாக வெளிப்படுகிறது.பூசைநாளில் திருக்களாச்சேரி செல்ல இயலாதவர்களும்,செல்ல வாய்ப்பில்லாதவரும்,சென்றாலும் அருகிருந்து கண்டுகளிக்க முடியாதவரும் தம் மனக்கண்ணால் கண்டுகளிக்கும் வண்ணம் அழகாக உரைத்துள்ளார். சொல்வளமும் கருத்தாழமும் மிக்க பாடல்கள் பல இருப்பினும் என் இதயத்துள் சென்று குறுதியில் கலந்த இரு பாடல்களை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சேற்றில் உழன்ற பாவியென்னைத் தேற்றிக் கரும வினையகற்றிப் போற்றிப் பாட வைத்தவளே ஏற்றி வைத்தேன் இதயத்தில் (63) தாயினும் மேலாய்ப் பரிந்தென்றன் வாயினால் பாடத் தமிழ்தந்தாய் ஓய்விலா துனையே நினைக்கின்ற தேய்விலா அறிவைத் தந்திடம்மா (85) கருத்தோட்டமும் ஓசைநயமும் மிக்க பாடல்களும் புகழ்மாலைப் பகுதியில் நிறைந்துள்ளன.பின்வரும் இரு பாடல்களும் வாய்விட்டுப் படிக்கும் போது என் செவிவழி புகுந்து உள்ளத்திற்கு இன்பம் தந்தன.சான்றுக்காக அவற்றைக் குறிப்பிடுகின்றேன். துடித்தேன் துன்பம் மனம்பிழிய வடித்தேன் கண்ணீர் விழிவழிய படித்தேன் அமுதாய் நீவந்தாய் பிடித்தேன் பாதம் நீகாத்தாய்(47) எப்பிழை புரிந்துநான் இருந்தாலும் அப்பிழை பொறுத்திடும் அம்மைநீ எப்பிறப் பெடுத்துநான் வந்தாலும் அப்பனும் அம்மையும் நீயம்மா(81) அன்பன் க.நாராயணன்

21.10.18

institut francais Pondicherry library

institut francaise Pondicherry (ifP)
All of my articles in websites are from the materials provided by this institution. I thank the Librarian, Asst.Librarians - Monsieur Saravanane, Monsieur Ramanujam and others who extended their wholehearted cooperation to me.
This is the sacred place where I met GOPALAIYYAR('Gopalayyan' he used to name him) and Pulavar VILLIANUR VENKATESAN.

நிகழ் உலகம்!

கருவறைக்குள் முடங்கிக்
கிடந்த கிடப்பே மேல்.
- தேவமைந்தன்

18.10.18

மோனஞானம் ~ ஓர் இணர்

'எதை வெறுக்கிறோமோ, அதையே பின்னர் விரும்புகிறோம். எதை விரும்புகிறோமோ, அதையே ஒரு காலத்தில் வெறுக்கிறோம். எதிரெதிரான உணர்ச்சிகளே நம் உள்ளத்தை ஆட்டி வைக்கின்றன. அதனால்தான் மெய்ஞ்ஞானிகளும் சித்தர்களும் கடைசியில் மௌனமாகி விடுகின்றனர். உலகியலை ஆழ்ந்து கற்று அறிந்ததன்பின் அருணகிரிநாதர், *ஆசா நிகளம் துகள் ஆயினபின்
பேசா அநுபூதி பிறந் ததுவே!* என்று நுணுக்கமாக உரைப்பதும் இதையே.'

10.10.18

அறிவியல் ஒன்றே கடவுள்!

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமை; கடந்த ஆட்சியில் ஒப்பந்த|தொகுப்பூதிய முறையில் வேலைகொடுக்கப் பட்டவர்களின் நியமனங்களை ரத்து செய்தல்; தங்களுக்கு வாக்களித்த மக்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுதல்; அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் மானியங்களை நயவஞ்சகமாகப் பிடுங்குதல்; நம்பிய மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு பொதுமேடைகளில் நடிகநடிகைகளே அசந்து போகும்படியாக, அரசியல் பங்காளிகளுடன் முகம்விரியச் சிரித்துக் காட்டுதல். இவை, நீதிநூல்கள் நம்மை வற்புறுத்திய அறமதிப்பீடுகள் அனைத்தும் அறவே வீழ்ந்துவிட்டன என்பதற்கான அடையாளங்கள் அல்லாமல் வேறென்ன? பார்க்கப்போனால், இன்றைய நிலையில் நம் நாட்டின் வலிமையான எதிர்க்கட்சிகளாக ~ முகநூல் வாட்சப் யூடியூப் முதலான வலைத்தளங்கள் மட்டுமே உயிர்ப்போடு இயங்கி வருகின்றன. இவற்றையும் கெடுப்பதற்கென்றே, கோட்டு சூட்டுப் போட்டுக்கொண்டு அடையாளம் கிடைக்காத இடங்களிலிருந்து, நாம் இன்னும் சிற்சில ஆண்டுகளில் அழிந்துபோவோம் என்று இனவழிப்பு ஆரூடங்கள் சொல்லிக்கொண்டவாறே தங்கள் வசதிகளை மட்டும் மேலும் பெருக்கியவாறு இருக்கிறது'கள் - சில புதிய 'அருள் வாக்கு'கள்.
மக்கள் தொடர்பு சாதனங்கள் அசுரவளர்ச்சி அடைந்து கொண்டே வருகின்றன. இருந்தும் திருந்தாத அரசியல்வாணர்களின் அரசியல் முகவர்கள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து தம் கட்சியின் தேர்தல் வீணடிப்புகளுக்காக கரன்சிகளைக் குவிக்கிறார்கள்.
நிகழ் சமூகத்திலும் தம்மிடமுள்ள உபரிப்பணத்தை உருப்படியாகச் செலவிடாமல், சகமாந்தரை வீழ்த்தவும் சிதைக்கவும் தற்கொலைகளுக்காளாக்கவும் *பயன்* படுத்தும் தீயவர்களைப் படைக்கிறார்கள்.
*மனித சுயநலத் தீவிரவாத*த்தால் அழிவுக்கு உள்ளாக்கப்படும் கானுயிர்களும்; அளவிறந்த சூழல்மாசுகளால் நோயெதிர்ப்பாற்றலைக் கூட இழந்துவாடும் அனைத்துலக மக்களும்; அந்த அழிவிழப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் முதலாளித்துவமும் மென்மேலும் வெற்றிபெற்று வருகின்றன. திரைப்படத்துறையும் திரையரங்கங்களும் புதிய கடன்காரர்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கின்றன.
இந்த நிலையில் ஆத்திக மடத்துத் தலைவர்கள் போலவே ஆகிவரும் நாத்திக(மடத்துத்) தலைவர்கள், தம் பெரியோர்- சமூகச் சீர்திருத்தத்துக்காகச் சேர்ந்த நிதிக்குவைமேல் 'மான'ம் மிகுந்து வீரமாக உட்கார்ந்து கொண்டு மணிமணியான புத்தகங்களை 'மாட்டிக்கெண்டவனை'ச் செலவுசெய்யவைத்து இலட்சக்கணக்கில் வெளியிடும் 'நம்பிக்கைச் சுரண்டல்' வேறு.
**கரப்பான்பூச்சிகளைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்** என்று ஆர்.ஈ.தான்சி என்னும் நரம்பியல் பௌதிக ஆய்வாளர் அறிவுறுத்துவதைக் கடைப்பிடிக்க வேண்டியதுதான்.
**********************
முழுமையான அறிவியல் நோக்கும் போக்கும் மட்டுமே இந்த நாசகாரக் கும்பல்களிடமிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளும் ஒரே வழி.

#அறிவியல் #நோக்கு #மட்டுமே #நம்மை #காக்கும்

(This also appears in Devamaindan's Timeline in Facebook)