19.12.11

'நாடகச் செல்வம்' நா.வை.பாலகிருட்டிணன்(என்.வி.பாலகிருஷ்ணன்) மறைவு

'ஐம்பது இலட்சம்' முதலான மேடை-நூல் நாடகங்களால் புகழ் பெற்றவரும்; ஏலவே நம் வலைப்பதிவுகளிலும் முகநூல்(Facebook) பக்கத்திலும் இடம் பெற்றவரும்; நெல்லை, கோவை முதலான வானொலி நிலையங்களின் அன்பரும்; நாடகக்கலை அன்பர் பலரின் நண்பரும்; இவ்வாண்டு ஏப்பிரல் மாதம், சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் அவ்வை கே. சண்முகம் குடும்பத்தாரால் 'நாடகச் செல்வம்' என்ற விருதுவழங்கப் பெற்றவருமான நாடகாசிரியர் கோவை நா.வை. பாலகிருட்டிணன் அவர்கள் கோவையில் புகழுடம்பு பெற்றார். அவருடல், அவர் வாழ்ந்த ஊரான நெல்லை விக்கிரமசிங்கபுரத்துக்கு, அவர் கொழுந்தியார் சுசீலா அம்மையார் - அவர் துணைவர் கோ.இலெனின் அரங்கராசனார் ஆகியோருடன் அவர்தம் இளைய புதல்வியார் கலைவாணிதேவி - அவர் துணைவர் சிவத்திரு கந்தசாமி ஆகியோர் முயற்சியால் மருத்துவ மனையூர்தியில் கொண்டு செல்லப்பெற்று, சிவநெறிப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நெல்லை விக்கிரமசிங்கபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பெற்றது. அவருக்கு விஜயசாமுண்டீஸ்வரி, கலைவாணிதேவி என்ற இரு புதல்வியரும் மருமக்கள் பெயரர் பெயர்த்திமார்களும் உள்ளனர்.

முகவரி:

'சிவகலை' இல்லம்,
25/15, சந்நிதி தெரு,
விக்கிரமசிங்கபுரம் - 627 425
திருநெல்வேலி மாவட்டம்.

5 comments:

Anonymous said...

naa vai enra thalaippu ezhuththugalin virivu enna?
anbodu,
Sirajdheen,V.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

வணக்கம். அவர்தம் தந்தையார்தாம் கொங்குப் புலவர் நா. வையாபுரிப் பிள்ளை அவர்கள்.

Anonymous said...

avar en mel migunda pasam kondirundar.
G.Krishnamoorthy
karur

Anonymous said...

கோவை நா.வை.பா மறைவுச்செய்தி யறிந்தேன்.வெல்லும் துாயதமிழ் அட்டையும் பாடலும் வலைப்பதிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
கதன்

Anonymous said...

எல்லாச் செய்திகளும் கேள்விப்பட்டேன். சுசீலா வந்திருந்தார்கள். வாழ்த்துகள்.
தமிழ்த்தந்தி அ.சிவலிங்கனார்
திருச்சி.21
(கைப்பேசி வழி)
09/01/12 காலை.